ஒரே பாட்டுல ஓஹோனு வாழ்க்கை - Single Songல சிகரம் ஏற வச்ச பாட்டுகள் ! | Tamil Cinema

நல்லவேளை ’தமிழ்படம்’ முன்னாடியே ரிலீஸ் ஆகிருச்சி. இல்லன்னா, சமீபத்துல பறந்த ’சந்திராயன் – 3 யோட ’விக்ரம் லேண்டர்’ சிவா பேர்லதான் நிலவுல லேண்டாகியிருக்கும்.
Tamil Cinema
Tamil Cinemaடைம்பாஸ்

எடுக்கிறது சினிமாதான்னாலும், பாடுறது பாட்டுதான்னாலும் ஒரு நேர்மை வேணாமா..? பஞ்சத்துல வாழுற ஹீரோ, நாலரை நிமிஷப் பாட்டுல பணக்காரர், கோடீஸ்வரர் ஆகிறதெல்லாம் மனசாட்சிக்கு உறுத்துமா, உறுத்தாதா..?னே தெரியலை.

ஃலைப்ல ஜெயிக்கிறதுக்கான மோட்டிவேஷன் ஸாங்கா இருந்தாலும் பாட்டைப் பாக்குற அப்பாவி ஜனங்க, ’என்னய்யா இது ரெஸ்ட்ரூம் போறதுக்கு முன்னாடி வீடு வீடா.. நியூஸ் பேப்பர் போட்டுட்டு இருந்த ஹீரோ, போயிட்டு வர்றதுக்குள்ள பணம் சம்பாதிச்சி, வீடு கட்டி, கார் வாங்கி, பெரிய பேக்டரி ஓனராகிற அளவுக்கு வளர்ந்து நிக்கிறாரே’ன்னு ஒரு திகிலடிக்குமா இல்லையா…? அப்படி சிக்கிள் ஸாங்குல சிகரம் ஏறின பாட்டுகள்தான் இதெல்லாம்.

1 . ஒண்ணுக்கு ஒண்ணா, கண்ணுக்கு கண்ணா இருந்தவங்க ’அண்ணாமலை’ ரஜினியும், சரத்பாபுவும். ஒரே தட்டுல திங்கிறது என்ன…? ஒரே பெட்டுல தூங்கிறது என்ன..? பெவிக்கால் தடவி, பைண்டிங் பண்ணின மாதிரி பிரியாமதான் இருந்தாங்க. ஆனா, காசு, பணம்னு வர்றப்போ அண்ணன் - தம்பியே ஆளை காலி பண்ண அலையுறப்போ, பிரெண்ட்ஸ்ங்க எம்மாத்திரம். ஒரு கட்டத்துல ரஜினி - சரத்பாபுவுக்கு மத்தியில மாட்டுக்கொட்டை மூலமா மனஸ்தாபம் வருது.

கோடீஸ்வரன் புள்ள சரத்பாபு மாட்டுக்கொட்டகைய இடிக்க, வெகுண்டு எழுந்த ரஜினி, ’மாட்டுக்கொட்டைய இடிச்சிட்டேன்னு மாஸ் காட்டாத.. உன்னை விட, மாடமாளிகை, கூடகோபுரம் கட்டி, அதுல சீனா டைல்ஸ், இத்தாலி மார்பிள் பதிச்சு, மாடுகளை அதுல மானத்தோட வாழ வைப்பேன்’னு குஸ்தி வாத்தியார் மாதிரி தொடைய தட்டிட்டு கிளம்பறாரு. அங்கதான் ’வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்’ னு ஸாங் ஸ்டார் ஆகுது. பந்தயத்தை பால்ல இருந்தே தொடங்குவாரு ரஜினி.

பசு காம்புல பத்து கிராம் பால்தான் கறப்பாரு, அடுத்த செகண்ட்டுலயே ஆயிரக்கணக்கான பால்பவுடர் டப்பா அடிக்கியிருக்கும். அடுத்து, பால்கோவாவை குடும்பமே சேர்ந்து பாக்கெட் பண்ணும். அடுத்த ஃபைவ் மினிட்ஸ்ல, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலே கட்டி முடிச்சிருப்பார். நல்லவேளை அஞ்சி நிமிஷத்துல ஸாங் முடிஞ்சிருச்சி. இன்னும் ரெண்டும் நிமிஷம் எக்ஸ்டர்ன் பண்ணியிருந்தா மெரினா பீச்சை வாங்கியிருப்பார்.

Tamil Cinema
Tamil Cinema : மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

2 . பெத்த புள்ளைய எந்த அப்பனுக்குதான் பிடிக்கும்..? அப்படி பிடிக்காத சரத்குமார் பிள்ளையாவும், கழுவி ஊத்துற அப்பனாவும் சரத்குமாரே நடிச்ச படம்தான் ’சூர்யவம்சம்'. மகன் சரத்தைப் பார்த்தால், அப்பா சரத் திட்டுற ரெண்டு வார்த்தை உதவாக்கரை, உருப்புடாதவன் அதைக் கேட்டுக் கேட்டு காது ஜவ்வு மறுத்துப்போயி கேஷுவலாக எடுத்துக்கிட்டாலும், மகன் சரத்தை மேரேஜ் பண்ணிக்கிட்ட தேவயாணிக்கு நரம்பு கொதிச்சு, தேகம் நடுங்குது.

அதனால, உதவாக்கரைனு திட்டுன அப்பன் முன்னாடி உயர்ந்து காட்டி, ஜபர்தஸ்தா வாழணும்னு முடிவு பண்றாங்க. முதல்ல.. சரத் டவுன்பஸ் ஓட்டுறது, பஸ்ஸுக்குள்ள டிவியில படம் காட்டுறது, டிக்கெட் வாங்குறவங்களுக்கு குலுக்கல் முறையில குடம் கொடுக்கிறதுன்னு புதுப்புது அயிட்டங்களை இறக்கி, பிஸ்னெஸ்ஸை டெவலப் பண்றாங்க. அப்போ வரும் பாருங்க ஒரு பாட்டு ’நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது, சிறகை விரித்து பறப்போம்’னு தேவயாணி பாடுவாங்க.

அந்த பாட்டுக்கு நடுவுல ஒரு பஸ்தான் நின்னுட்டு இருக்கும். திடீர்னு பார்த்த நாலஞ்சு பஸ் நிற்கும். என்னாடா இது.. பஸ் பாடி கட்டுற பட்டரை ஏதும் ஆரம்பிட்டாங்களோ..? ன்னு ஆச்சர்யத்துல திகைச்சி நிப்போம். அப்புறம்தான் தெரியும் இருந்த ஒரு பஸ்ஸு மத்த பஸ்களை சம்பாதிச்சி கொடுத்திருக்குன்னு. இந்தப் பாட்டுலயே தேவயாணி கர்ப்பமாகி, குழந்தையும் பெத்தெடுத்து, அது நடக்கிற ஸ்டேஜ்ல இருக்கும். இது எல்லாமே 4 நிமிஷம், 40 செகண்ட்ஸ்ல நடந்திருக்கும்.

Tamil Cinema
Tamil Cinema : கட்சி தொடங்கி ’கண்டமான’ ஹீரோக்கள் - ஒரு லிஸ்ட் !

3 . ரோஜாவை எப்படியாச்சு பெரிய பாடகியாக்கிப் பார்க்கணும்னு கார்த்திக்கும், அவர் நண்பர்களும் ஒத்தைக்கால்ல நின்ன படம்தான். ’உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’.. எங்கெல்லாமோ வாய்ப்புக்கேட்டு வாசல்ல நிப்பாங்க. எல்லா இடத்துலயும் ’கிளம்பு.. கிளம்பு காத்து வரட்டும்’னு அனுப்பிடறாங்க. அப்போ ரோஜாவுக்கு முதல் வாய்ப்பை கங்கை அமரன்தான் கொடுக்கிறாரு. ’வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்’ னு முதல் வரி பாடினதுமே கங்கை அமரன் கண் கலங்குவாரு.

அந்த பாட்டை ரோஜா பாட ஆரம்பிச்சதுமே கேசட் கடைங்கள்ல ரோஜா பாடுன கேசட்டுதான் வேணும்னு காலேஜ் பொண்ணுங்க அடம்புடிச்சி வாங்கிட்டுப் போவாங்க. அதே பாட்டுல குஷ்பு டான்ஸ் ஆட, கே.எஸ்.ரவிகுமார் ஷூட் பண்ண, தேவா வாய்ப்பு கொடுக்கிறதுன்னு முதல் பாட்டைப் பாடி, ரெகார்டிங் தியேட்டரை விட்டு வெளிய வர்றதுக்கு முன்னாடியே பேமஸ் சிங்கரா ஆகிடுவாங்க ரோஜா. இந்தப் பாட்டுக்கு சில ஃபாரின் லேடீஸ்களும் டான்ஸ் ஆடுவாங்க பாருங்க செம..செம.. யாருப்பா இந்த படத்தை டைரக்ட் பண்ணின மகராசன்..? னு பெயர் பார்த்தா நம்ம இயக்குனர் விக்ரமன். சர்தான்...

Tamil Cinema
கடவுள் வேஷம்போட்டு கடுப்பேத்தின நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

4 . ஒரு பிரெண்டுக்கு இன்னொரு ஏழை பிரெண்டு என்ன பண்ணுவாங்க..? புரோட்டா வாங்கிக்கொடுப்பாரு, கூட காசு இருந்தா பிரியாணி, முடிஞ்சா பீர் வாங்கிக் தருவாங்க.. ஆனா, தருண் தன் பிரெண்டுக்காக தயிர், லெமன், புளியோதரை செஞ்சு அதை பொட்டலம் கட்டி, தெருத் தெருவா கூவிக் கூவி வித்துட்டு வருவாரு, பீச்சுல சுண்டல், தம் டீ போட்டு விற்பாரு. இப்படி வேர்வை சிந்திக் கெடைக்கிற அமவுண்டுல புதுசா கிடார் வாங்கி தன் பிரெண்டான குணாலுக்கு கொடுப்பாரு. பாத்ரூம்ல மட்டும் பாடிட்டு இருந்த குணால் குரல் வெளியில வரணும்னு முட்டி, மோதி பாடுபடுவாரு தருண்.

இத்தனை முறைவாசலும் தன் நண்பனுக்காகவும், ’புன்னகை தேசம்' படத்துக்காகவும்தான் பண்ணுவாரு. ’எங்கள் மூச்சுக்குள்ளே உண்டு பாட்டுச் சந்தம்’னு குணால் பாட ஆரம்பிச்சதுமே கூட்டத்துல ’அப்ளாஸ்’ அள்ளும், விசில் சத்தம் காதை துவம்சம் பண்ணும். மேடைல இந்த பாட்டை பாடிகிட்டு இருக்கும்போதே வெளியில இவர் பாட்டு கேசட்டு உலக சாதனை படைச்சிட்டு இருக்கும், கின்னஸ்காரங்க இவரு பாட்டை கின்னஸ்ல பதிவு பண்ணாம தூங்கமாட்டோம்னு தவியா தவிப்பாங்க.

தமிழ்நாட்டுல வர்ற அத்தனை பத்திரிகையும் இவரு புகழைத்தான் ’பூஸ்’ பண்ணுவாங்க. அப்படி பாடுற ஒரு நண்பன் இப்போ நமக்கு கிடைச்சா, பாட்டு ஷோ நடத்துற டிவி ஆபீஸ் அட்ரஸ் கொடுத்து டாட்டா காட்டி அனுப்பி வெச்சிருவோம். நாம எங்க போயி புளியோதரை கிண்டறது..?

Tamil Cinema
பெண் வேடமிட்டு ‘சொதப்பிய’ நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

5 . தன்னை தானே கலாய்ச்சிக்கிற மாதிரி, தமிழ் படங்களை ’தமிழ் படம்’ ங்கிற பெயர்ல கலாய்ச்சி காசு பார்த்த படம். கிட்டத்தட்ட தமிழ்ல வந்து ஹிட்டான 25 படங்களை பிரிச்சி மேய்ஞ்சி, சீன்களை சின்னாபின்னமாக்கி, சிரிக்க வெச்சிருப்பாரு ஹீரோவா நடிச்ச ‘மிர்ச்சி’ சிவா. அவர் ஒரு பணக்கார பொண்ணை லவ்ஸ் பண்ணுவாரு. அது தெரிஞ்ச பொண்ணோட அப்ஸ், ’ஏழை பையனுக்கு என் பொண்ணை தரமாட்டேன்’னு ரவுசு பண்ணுவாரு.

கொதிச்சு எழுந்த சிவா.. ’எழுதி வெச்சிக்கோ இப்போ வரப்போற ஸாங்குல பல்லவி, ஒரு சரணம் மட்டும்தான் கம்போஸ் பண்ணி வெச்சிருக்காங்க. அது முடியறதுக்குள்ள பணக்காரனாகிக் காட்டுறேன்னு அவர்கிட்ட சபதம் பண்ணிட்டு கிளம்ப, பிஜிஎம்ல ஆரம்பிச்சு ’ஒரு சூராவளி கிளம்பியதே, சிவதாண்டவம் தொடங்கியதே..’ னு ஸாங்கு ஸ்டார்ட் ஆகும் சைக்கிள்ல பேப்பர் போடுறதுல தொடங்கி, பேரிச்சம்பழத்துக்கு ஈயம், பித்தளை வாங்குறது, காய்கறி, அயர்ன், சலவை, சாணை, சாக்கடை அள்ளுறதுன்னு கிட்டத்தட்ட 70 வகையான வேலைகளைப் பார்த்து, கோடிக்கணக்கான பணத்தை சேர்த்து பீச்சு, ஹாஸ்பிடல், ஹோட்டல், விமான நிலையம், பிணவறை வரைக்கும் தன் பெயர்ல வாங்கிப்போடுவாரு.

நல்லவேளை ’தமிழ்படம்’ முன்னாடியே ரிலீஸ் ஆகிருச்சி. இல்லன்னா, சமீபத்துல பறந்த ’சந்திராயன் – 3 யோட ’விக்ரம் லேண்டர்’ சிவா பேர்லதான் நிலவுல லேண்டாகியிருக்கும். அப்றம், நிலவை லீசுக்கு எடுத்த சில குரூப்பினர் சிவா ஹெட்டுக்கு டெட்லைன் விதிச்சிருப்பாங்க.

- எம்.ஜி.கன்னியப்பன்.

Tamil Cinema
காணாமல் போன கதாநாயகிகள் - ஒரு லிஸ்ட்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com