ஆக்சிஜன் மாஸ்க், ஹெல்மெட் போடாம விஜய் ஜெட் விமானம் ஓட்டுனது. அஜித் பல்கேரியா போலீஸ்கிட்டயே பல்டி அடிச்சு தப்பிச்சதுன்னு ஓவர்டோஸ் சாகச சண்டைக் காட்சிகளை நெட்டிசன்கள் சமீபத்தில் வெச்சு செஞ்சாங்க. ஆனா, அதைவிட படுபயங்கர சாகசமெல்லாம் நம்ம தமிழ் சினிமால இதுக்கு முன்னால வந்திருக்கு. வாங்க அதை கிண்டி கிளறி பார்க்கலாம்.
'பாசமுள்ள பாண்டியரே' படத்துல யானைக்கு கால்ல சுளுக்கு பிடிச்சிக்கும். அந்த சுளுக்கை சரிபண்றேன்னு ராஜ்கிரண் தன்னோட தொடைமேல யானையோட ஒரு காலை தூக்கி வெச்சு அந்தக்காலுக்கு எண்ணெய் தேச்சு சுளுக்கை சரி பண்ணுவார். அது காலா இல்ல காருக்கு டயர் மாத்துற ஜாக்கியானு ஆச்சரியப்பட்டுப்போனேன்.
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி பண்ணாத சாகசங்களா 'ராஜாதி ராஜா'ல சின்ராசு ரஜினிய தூக்குல போடப்போற கடைசி செகண்ட்ல ராஜசேகர் ரஜினி திடீர்னு தூக்குமேடை சுவரை கார்ல வந்து இடிச்சு உடைச்சு சின்ராசு ரஜினிய காப்பாத்துவார்.
தூக்கு மேடைக்குள்ளேயே காரை கொண்டுவந்து பார்க் பண்றதெல்லாம் சூப்பர் ஸ்டார தவிர வேற யாரால பண்ண முடியும்.
சூர்யா மட்டும் என்ன சும்மாவா ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு வேகமா போற சூப்பர் பவர் தமிழ் ஹீரோக்கள்ல அவர்கிட்ட மட்டும்தான் இருக்கு.
'வேல்' படத்துல "மவுண்ட் ரோட்ல இருந்து மெட்ராஸ் ஏர்போர்ட்டுக்கு மூணு நிமிஷம். மெட்ராஸ் ஏர்போர்ட்ல இருந்து மதுரை ஏர்போர்ட்டுக்கு பிளைட்ல அஞ்சு நிமிஷம். மதுரை ஏர்போர்ட்ல இருந்து திண்டுக்கல் வழியா சொக்கம்பட்டிக்கு ரெண்டே நிமிஷம். ஆக பத்தே நிமிஷத்துல மெட்ராஸ்ல இருந்து மதுரை வந்த சூப்பர் மேனுங்க சூர்யா.
செங்கோட்டை படத்துல பறக்கிற ஃபிளைட் வெளியே டயர்ல தொங்கிட்டு போவார் அர்ஜுன். திடீர்னு அவ்ளோ அடி உயரத்துல இருந்து அசால்ட்டா கீழே குதிச்சு ஒன்னும் ஆகாம எந்திரிச்சு ஓடுவார்.
ஒரு பிளாஸ்திரி ஒட்டுற அளவுக்கு கூட காயம் படாம எப்படி தப்பிச்சாருனு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். ரீசண்டாதான் இதுவே ஒரு இங்கிலீஸ் படத்துல இருந்து ஆட்டைய போட்டு எடுத்ததுனு தெரியவந்துச்சு.
'ஆம்பள' படத்துல விஷால் ஜீப் பேனட் மேல மல்லாக்க படுத்து பறந்து வர்றது எல்லாம் அதுவரை பாலகிருஷ்ணா கூட பண்ணாத ஆக்ஷன் அட்ராசிட்டிகள். அரபுநாட்டு நெட்டிசன்கள் கண்ல அந்த வீடியோ சிக்க அவங்க வெச்சு செஞ்சி விட்டாங்க.
அவங்களால உலக லெவல் வைரலானார் நம்ம விஷால். இதுதான் இப்படின்னா 'ஆக்ஷன்' படத்துல பாகிஸ்தானுக்கு போய் அந்த ஊர் தீவிரவாதியை அங்கேயே வெச்சு கடத்தி அசால்ட்டா இந்தியாவுக்கு தூக்கிட்டு வருவார்.
பாகிஸ்தான் தீவிரவாதியை தூக்கிட்டு வர்றதுல 'பீஸ்ட்' விஜய்க்கே முன்னோடியாக இருந்தவர் நம்ம விஷால்தான் நண்பர்களே.
நம்ம கேப்டன பத்தி எதுவுமே சொல்லலையேனுதானே நினைக்கிறீங்க சொல்றேன் சொல்றேன். அவர் ஐஸ்கட்டில படுத்தது, கரண்ட் பாக்ஸ வெடிக்க வெச்சது எல்லாம் நமக்கு நல்லாவே தெரியும்.
ஆனா, அதுக்கும் முன்னால கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்த்தா 'தாயகம்' படத்துல பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்ல இந்திய பார்டரை கிராஸ் பண்றது 'செந்தூர பூவே' படத்துல ஓடுற ரயில்ல தனியா பிரிஞ்ச ஒரு பெட்டியை வெறும் கையால கயிறு கட்டி இழுத்துட்டு வர்றது எல்லாம் நம்ம கேப்டனைத் தவிர யாராலயும் பண்ணவே முடியாது சம்பவங்கள்.