'விஜய் ஆலுக்காஸ், அஜித் சன்ரைஸ், ரஜினி கோலா' - விளம்பரத்தில் நடித்த நடிகர்கள்

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்"னு 'கரகாட்டக்காரன்'ல செந்தில் சொல்ற மாதிரி விளம்பரத்துக்காக விளம்பரத்தில் நடிச்ச தமிழ் ஹீரோ ஹீரோயின்களோட லிஸ்ட்தான் இது.
விஜய் ஆலுக்காஸ்
விஜய் ஆலுக்காஸ்டைம்பாஸ்

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்"னு 'கரகாட்டக்காரன்'ல செந்தில் சொல்ற மாதிரி விளம்பரத்துக்காக விளம்பரத்தில் நடிச்ச தமிழ் ஹீரோ ஹீரோயின்களோட லிஸ்ட்தான் இது.

தளபதி விஜய் ஜோஸ் ஆலுக்காஸ், டொக்கோமோ, கொக்ககோலா விளம்பரங்கள்லதான் நடிச்சிருக்கார். கோலா விளம்பரத்தில் நடிச்சத கூலா மறந்துட்டு 'தாமிர பரணி ஆறுல ஒரு கோலா கம்பெனி 9 லட்சம் லிட்டர் தண்ணி எடுக்குறாங்க"னு 'கத்தி'ல கத்தி பேசிட்டு இருப்பார் நம்ம தளபதி.

அஜித் படத்துல நடிக்கிறாரோ இல்லையோ நல்லா நடக்குறார்னு அவர் மேல ஒரு விமர்சனம் இருக்கு. அத்துக்கேத்த மாதிரி அவர் நடிச்ச விளம்பரமும் அப்படித்தான் இருக்கும். மியாமி செப்பல்தான் அவர் நடிச்ச முதல் விளம்பரம். அடுத்து நெஸ்கஃபே சன்ரைஸ் விளம்பரத்துல நடிச்சவர் அப்பறம் எந்த விளம்பரத்துலயும் அவர் தலைய காட்டல.

விஜய் ஆலுக்காஸ்
'கில்லில விஜய் சேதுபதியா? முத்து பாண்டி யாரு?' - டைம்பாஸ் கார்டூன்ஸ்

ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்லவா ரஜினியும் விளம்பரத்துல நடிச்சிருக்கார். பால்ம் கோலாங்கிற பழைய கூல்ட்ரிங்ஸ் விளம்பரம்தான் அது. பாட்டில் மூடியை ஓபனர் இல்லாம வெறும் வாயாலயே ஸ்டைலா ஓபன் பண்ணுவார்.

எதுக்கு அவர் ஓபன் பண்ற மாதிரி எடுத்தாங்க, ரஜினி சும்மா பார்த்தாலே மூடி கூட தானா திறக்குமே.

அணில் சேமியா, மினிஸ்டர் வொயிட் விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்த நம்ம விஜய் சேதுபதி திடீர்னு மண்டினு ஒரு ஆன்லைன் மளிகை விளம்பரத்துல நடிச்சார். மண்டி விளம்பரத்துல நடிச்சு வண்டி வண்டியா வாங்கிக் கட்டிக்கிட்டார்.

படத்துல மட்டும் விவசாயம், விவசாயிகள்னு டயலாக் விட்டுட்டு நிஜத்துல கார்பரேட்டுக்கு ஆதரவா செயல்படுறார்னு டென்ஷானாகிட்டாங்க நம்ம வியாபாரிகள்.

இந்தியாவிலேயே அதிக விளம்பரங்கள்ல நடிச்ச ஹீரோ யாருன்னு லிஸ்ட் எடுத்தா நம்ம சூர்யாதான் முதல் இடத்தில் இருப்பார். நெஸ்காஃபி, ஏர்செல், பெப்சி, க்ளோஸ்-அப், நவரத்தினா கூல் டால்க், மலபார் கோல்டு அன் டைமண்ட், சூப்பர் சரவணா ஸ்டோர், சன்ஃபீஸ்ட், ஹிமானி நவரத்தின ஆயில்னு போய்கிட்டே இருக்கு அந்த லிஸ்ட். படிச்சுப் பார்க்கவே மூச்சு வாங்குதுல்ல?

விஜய் ஆலுக்காஸ்
'ஜீவானந்தமாக சூர்யா' - டைம்பாஸ் கார்டூன்ஸ்

சமந்தாவும் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கிறதுக்கு முன்னால விளம்பரங்கள்ல நடிச்சிருக்காங்க. அதுல ஒண்ணு ஆஷிகா தங்கமாளிகை நகைக்கடை விளம்பரம்.

திரிஷாவும் ஹீரோயினா நடிக்கிறதுக்கு முன்னால சில விளம்பரங்கள்ல நடிச்சிருக்காங்க. பித்தவெடிப்பு, சேத்துப்புண்ணுக்கு தடவுற திருப்பால் மருந்து விளம்பரம், ராஜிவ் மேனன் இயக்கத்துல பெர்க் சாக்லேட் விளம்பரமும் அதில் அடங்கும்.

விஜய் ஆலுக்காஸ்
'அலிபாபா குகை பாஸ்வேர்டு, சிட்டிசன் தல' - தமிழ் சினிமாவின் உலக சாதனைகள்

இது போக நம்ம சிவகார்த்திகேயன் போத்தீஸ் விளம்பரத்துலயும், ஜெயம் ரவி ஆலயா வேட்டி விளம்பரத்துல நடிச்சிருக்காங்க. ஆர்யா மவுண்டைன் டியூ, ஓட்டோ ஷர்ட்ஸ் விளம்பரத்துலயும், ஜீவா பாலிசி பஜார் விளம்பரத்துலயும் நடிச்சிருக்காங்க. தனுஷ் செவன்-அப் விளம்பரத்துல நடிச்சிருக்கார்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com