நீங்க தொடர்ச்சியாகத் தமிழ் சினிமாக்கள் பார்ப்பவரா? அது போதுமே. இதோ கீழே இருக்கும் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் சொல்லுங்க.
1. நாய், பாம்பு, குரங்கு ஹீரோவாக நடிக்கும் படங்களில் அதிக முறை செகண்ட் ஹீரோவாக வந்தது யார்?
1) ராம்கி 2) கரண் 3) நிழல்கள் ரவி 4) ராஜீவ்
2. ‘வேட்டைக்காரன்’ படத்தில் போட்ட அதே சட்டை, பேன்ட் போட்டு விஜய் நடித்த படம் எது?
1) ‘குருவி’ 2) ‘சுறா’ 3) ‘போக்கிரி’ 4) ‘வில்லு’
3. ராஜ்கிரண் என்றாலே நினைவுக்கு வருவது எது?
1) நல்லி எலும்பு 2) சாராய பாட்டில் 3) டவுசருக்கு மேல் வேட்டி 4) தக்காளி என்ற ஓசைகொண்ட கெட்ட வார்த்தை.
4. ஒரே பாட்டில் பணக்காரர் ஆனவர்களில், பெரிய பணக்காரர் யார்?
1) ‘அண்ணாமலை’ ரஜினி 2) ‘படையப்பா’ ரஜினி 3) ‘பாட்ஷா’ ரஜினி 4) ‘சூரியவம்சம்’ சரத்குமார்
5. அஜித் படம் என்றாலே பட பட்ஜெட் செலவில், பாதி எது வாங்க செலவாகும்?
1) கோட் 2) கூலிங் கிளாஸ் 3) துப்பாக்கி 4) கார் / பைக்
7. உடம்பின் எந்தப் பாகத்தைத் தொட்டால் 'ஜெஸ்ஸி... ஜெஸ்ஸி' என்று கேட்கும்?
1) கிட்னி 2) மனசு 3) அடிவயிறு 4) உச்சந்தலை
8. தமிழ் சினிமாவின் சிறந்த தலையாட்டி யார்?
1) டி.ராஜேந்தர் 2) மைக் மோகன் 3) ‘சுப்ரமணியபுரம்’ ஜெய் 4) பூர்ணம் விஸ்வநாதன்
9. அதிக எண்ணிக்கையில் ரேப் / ரேப் முயற்சிகள் செய்தவர் யார்?
1) ஆனந்தராஜ் 2) ராஜீவ் 3) செந்தாமரை 4) பொன்னம்பலம்
10. தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் காலேஜ் போனவர் யார்?
1) சின்னி ஜெயந்த் 2) விவேக் 3) முரளி 4) சார்லி
11. 'சாப்பிட்டாச்சா?' என்ற ஒரு வார்த்தை டயலாக்கை ஒரு மணி நேரம் பேசுபவர் யார்?
1) லொள்ளு சபா மனோகர் 2) சாருஹாசன் 3) சிவகுமார் 4) காந்திமதி
12. கூட இருந்தே குழி பறிப்பதில் அதிக ஆழம் தோண்டியவர் யார்?
1) நிழல்கள் ரவி 2) சரத்பாபு 3) ஜெய்கணேஷ் 4) ராதாரவி
13. கீழ்க்கண்டவர்களுள் யார் காக்கிச் சட்டை போட்டால், போலீஸ் டிபார்ட்மென்டுக்கே பெருமை?
1) அர்ஜூன் 2) விஜயகாந்த் 3) விஜயகாந்த் 4) விஜயகாந்த்
14. கூடப் பிறந்த அக்கா / தங்கச்சிகள் மேல் இமயமலை அளவு பாசம்கொண்டவர் யார்?
1) சிவாஜி கணேசன் 2) டி.ராஜேந்தர் 3) விஜயகுமார் 4) ‘கரகாட்டக்காரன்’ சண்முகசுந்தரம்
15. ராமராஜன் என்ற பெயரைக் கேட்டவுடன் உங்கள் மனதில் மலரும் நினைவு எது?
1) பசு மாடு 2) லிப்ஸ்டிக் 3) ஜிங்குச்சா கலர் சட்டைகள் 4) ரோஸ் பவுடர்