சினிமா விடுகதை : ‘தில்’ இருந்தாலும் ‘உதை’படுவார், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்ல'

ஒல்லிப்பிச்சான்; ஆனா தனுஷ் அல்ல. சாப்பாட்டுல சூராதி சூரன். கோட்ட அழிச்சாலும் புது ரூட்டுல போவாரே. அவர் யார்?
சினிமா விடுகதை
சினிமா விடுகதைடைம்பாஸ்
Published on: 

இந்த சினிமா விடுகதைக்கான க்ளூ ஒண்ணே ஒண்ணுதான் ‘சிரிப்புக்கு இவங்க கியாரன்டி’.

1. வசனத்தில் பல சமயம் சரக்கு வாசமடிக்கும். ஆனா பேருல மட்டும் வேற வாசமடிக்கும். அவர் யார்?

2. நியாயமா ‘மாற்றம்... முன்னேற்றம்...’ போஸ்டர் இவருக்கும் ஒத்துப்போகும். பாருங்க பேருகூட சங்கதி சொல்லிட்டுப் போகும். அவர் யார்?

3. ஒல்லிப்பிச்சான்; ஆனா தனுஷ் அல்ல. சாப்பாட்டுல சூராதி சூரன். கோட்ட அழிச்சாலும் புது ரூட்டுல போவாரே. அவர் யார்?

சினிமா விடுகதை
தமிழ் சினிமா கத்துக்கொடுத்த இங்கிலீஷ் - ஒரு லிஸ்ட்

4. கருப்புச் சட்டைக்காரன் காமெடிக்கு கெட்டிக்காரன்... மதுரைப்படம்னா பஞ்சா பறக்கிற காமெடி மத்த நேரத்துல நமத்துப்போறதுதான் ட்ராஜெடி. அவர் யார்?

5. கேப்புல கிடா வெட்டும் காமெடியன். கார்ப்பரேட்டானாலும் கார்ப்பரேஷனாலும் மீம்ஸ்னா இவர்தான்யா. அவர் யார்?

6. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்ல பாதி... எந்திரன்ல இருக்குதே மீதி... அவர் யார்?

7. ‘தில்’ இருந்தாலும் ‘உதை’படுவார். அவர் யார்?

8. பர்மா பொம்மைனு கிண்டல் பண்றவய்ங்களுக்குத் தெரியுமா..? ஊர் பேரைச் சொன்னா மணக்குதே காமெடி குருமா. ஹீரோயின் வேஷம் போட்ட இந்த ஆன்ட்டி போல வருமா... அவர் யார்?

சினிமா விடுகதை
சினிமா பன்ச் டயலாக்குகள Google Translator பேசுன இப்டிதான்!

விடைகள்:

1. சந்தானம்.

2. கவுண்டமணி.

3. புரோட்டா சூரி.

4. கஞ்சா கருப்பு.

5. வடிவேலு.

6. ரோபோ சங்கர்.

7. செந்தில்.

8. கோவை சரளா.

Timepass Online
timepassonline.vikatan.com