Tamil Cinema : கண்களே கதாபாத்திரங்களாக மாறிய தமிழ் படங்கள் - ஒரு சுவாரஸ்ய லிஸ்ட்!

விஜயை, சிம்ரன் பார்க்குற சீன் எல்லாமே அடிதடி. ஆனா, எல்லாமே எதேச்சையா நடக்கும். இந்த சந்துல ஒருத்தனை விஜய் அடிக்கும்போது வேறு சந்து வழியா சிம்ரன் போகமுடியாது ஏன்னா கதை அது இல்ல. அப்டி ஒரு தபா..
Tamil Cinema
Tamil CinemaTamil Cinema
Published on

தமிழ் சினிமாவுல கண்ணை பிரதானப்படுத்திக் கண்கலங்க வெச்ச பல கதைகள் வெளியாகியிருக்கு. திடுதிப்புன்னு விபத்துல பார்வை போறது, நாயகனோட விளையாட்டுச் சேட்டையால கண்ணு போறது, காதலன் இறந்து கண்தானம் பெற்றவரோட கண்ணைக் காதலிக்கிறது, இல்லன்னா பிறவியிலேயே பார்வை இல்லாமப் பிறக்கிறதுன்னு ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். கடைசி வரைக்கும் கண் பார்வை கிடைக்கிறது கஷ்டம்னு கொண்டுபோய்.

கிளைமாக்ஸ்ல ஆபரேஷன் லைட்டுக்கு முன்னாடி நாலு முகமூடி அணிஞ்ச டாக்டர்கள் தலைங்ளை ஒண்ணோட ஒண்ணு முட்டிகிட்டு நின்னதும் பார்வை வந்துரும். அப்படி சில படங்கள்.

1 . ’கீழ்வானம் சிவக்கும்’ சிவாஜி, சரிதா, ஜெய்சங்கர், சரத்பாபு நடிச்சிருப்பாங்க. சிவாஜிக்கு மருமகளா சரிதா. சரிதாவுக்கு தீராத வியாதின்னும் சீக்கிரம் செத்துருவாங்கன்ற உண்மை தெரிஞ்ச டாக்டரான நடிகர் திலகம் உண்மைய மறைச்சி, சரிதாவ பாக்கும்போதெல்லாம் நடியா நடிச்சி கண்ணப் பிழிவாரு பாருங்க அப்படியொரு பிழி. இன்னொரு பக்கம் பார்வை பரிபோன ஜெய்சங்கருக்கு வைத்தியமும் பார்ப்பார். அவருக்கு பார்வை வரணும்னு சரிதாவும் வேண்டிக்குவார்.

ஒரு கட்டத்துல ஜெய்யிக்கு கண் பார்வை வந்ததும்.. ’எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு’ ன்னுட்டு ரெண்டு அடி நீளத்துக்கு அரிவாளை தூக்கித் தோள்ல வெச்சிக்கிட்டு ’என் சிஸ்டரை கெடுத்தவன் போட்டோவைப் பார்த்து அவனை வெட்டணும்’ னு வெறியோட டயலாக் பேசுவாரு. அப்பதான் ஜெய்க்கு கண்ணைக் கொடுத்தது இறந்துபோன சரிதான்னும், ’உன் தங்கையைக் கெடுத்தவன் போட்டோ என்கிட்டதான் இருக்கு. ஆனா, சரிதா சாகிற வரைக்கும் அதை பார்க்க விரும்பலை’னு சொல்றார் சிவாஜி.

’சரிதா பார்க்க விரும்பாத அந்த போட்டோவை அவங்க கண்ணை வெச்சிருக்கிற நான் பார்த்தா, அந்த மருமக தெய்வதுக்கு பண்ற துரோகம்’னு போட்டோவை பார்க்காமலே சுக்குநூறா கிழிச்சுப்போட்டுட்டு போவாரு ஜெய். அந்த போட்டோல இருக்கிறது யாருன்னா…? சிவாஜி மகன் சரத்பாபு. டுஸ்ட்டுகே.. டுஸ்ட்டு வெச்சிக் காட்டுன படம்.

Tamil Cinema
சொந்தப் படம் எடுத்து ’சூனியம்’ வைத்த நடிகர்கள் - ஒரு லிஸ்ட்

2 . ’இளையதளபதி’ விஜய் – சிம்ரன் நடிச்ச படம் ’துள்ளாத மனமும் துள்ளும்’. குடும்பத்தக் காப்பாத்தணும்னு நினைக்கிற பொண்ணு சிம்ரன். விஜயை, சிம்ரன் பார்க்குற சீன் எல்லாமே அடிதடி, அடாவடி, துவம்சம் பண்றதுன்னு ரவுடிப் பையனானே புரிஞ்சுக்கிறாங்க. ஆனா, எல்லாமே எதேச்சையாதான் நடக்கும். இந்த சந்துல ஒருத்தனை விஜய் அடிக்கும்போது வேறு சந்து வழியா சிம்ரன் போகமுடியாது ஏன்னா கதை அது இல்ல. அப்டி ஒரு தபா.. காலேஜ் லேபுல சிம்ரன் ஃபார்முலா பார்த்துட்டு இருக்கும்போது அங்க ஒருத்தனை அடிக்கப் போனப்போ விஜய் கைபட்டு அமிலக் குடுவை விழுந்து உடைய, அந்த ஆவி சிம்ரன் கண்ணுல பட்டு பார்வை போயிடுது.

அதனால ரவுடி விஜய் மேல கோபமா இருக்காங்க. இன்னொரு பக்கம் விஜய் பாடுற பாட்டுப் புடிக்கும். அதை ரசிக்கிற சிம்ரன். பாடுற விஜயை நேர்ல பார்த்தது கிடையாது. தன்னாலதானே பார்வை போச்சுன்னு சிம்ரன் கூடவே இருந்து ஹெல்ப் பண்ணுவாரு விஜய். கடைசில கலெக்டரான சிம்ரனுக்கு பார்வை வந்துடுது. விஜயை பார்த்துக் கோபப்படுற சிம்ரன் தன் பார்வை போனதுக்குப் பின்னாடி தனக்காக விஜய் பட்ட வேதனைய ஃபிளாஸ்பேக்குல தெரிஞ்சுகிட்டு ஓடி வந்து கட்டிப்புடிச்சிக்குவாங்க சிம்ரன்.

Tamil Cinema
கடவுள் வேஷம்போட்டு கடுப்பேத்தின நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

3 . பார்த்திபன் – தேவயாணி நடிச்ச படம் ’நீ வருவாயென’. வேற ஒரு ஊர்ல வேலை பார்த்துட்டு இருந்த பார்த்தி, தேவயாணி இருக்குற ஊருக்கு டிரான்ஸ்ராகி வருவாரு. கெட்டிமேளம் சத்தம் கேட்டாலே காண்டாகி, கல்யாணமாகாத கடுப்புல இருந்த பார்த்திபன் வீட்டு வாசல்ல.. திடீர் திடீர்னு கோலம் போடுறது, ருசியா சமைச்சிக் கொண்டாந்து கொடுக்கிறது, தலைக்கு எண்ணை வெச்சி குளிக்கச் சொல்றதுன்னு பார்த்திய பகுமானமா பாத்துக்கிறாங்க தேவயாணி. பார்த்திக்கும் மாற்றலாகி வந்த ஊர்ல மனைவி கெடைச்சிடான்னு ’மஜாவா’ இருந்தப்பதான் பிளீச்சிங் பவுடர் போட்ட மாதிரி ஃபிளாஸ்பேகுல உண்மை பளிச்சிடுது.

அதாவது கண்ணுக்கு கண்ணா காதலிச்ச தேவயாணியோட காதலன் ஒரு விபத்துல இறந்துபோக, அவனோட கண்ணை எடுத்து பார்த்திபனுக்கு பொருத்தியிருப்பாங்க. அதனால, இத்தனை நாள் முறைவாசல் பண்ணினது எல்லாம் பார்த்திபனுக்காக இல்ல அவள் காதலன் கண்ணுக்காகத்தான்னும் ’காலம் முழுக்க கல்யாணம் பண்ணிக்காம காதலனோட கண்ணைப் பாத்துட்டே செத்துடுவேன்’னு கிளிசரின் உதவியோட கால் கிலோ அளவுக்கு கண்ணீர் வடிச்ச படம் அது.

Tamil Cinema
Tamil Cinema : கட்சி தொடங்கி ’கண்டமான’ ஹீரோக்கள் - ஒரு லிஸ்ட் !

4 . எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா நடிச்ச படம் ’எங்கள் தங்கம்' அந்தப் படத்துல எம்.ஜி.ஆருக்கு புஷ்பலதா சிஸ்டர், ஏ.வி.எம்.ராஜன் பிரெண்ட். ஒரு நாள் பார்வைத் தெரியாத புஷ்பலதா கற்பை ராஜன் சூரையாட, கொதிச்சுப் போன தலைவர் முகத்தை கைல பொத்திக்கிட்டு மேடு பள்ளத்துல போற டவுன் பஸ் மாதிரி குலுங்கி… குலுங்கி அழுவாரு. அப்புறம் கண்ணீரை புறங்கைல துடைச்சிட்டு, ’உன்னை கெடுத்தவனை உனக்கு தாலிகட்ட வைக்காம ஓயமாட்டேன்’னு சபதத்த விட்டத்தைப் பார்த்து சொல்லிட்டு வெறிகொண்டு ஓடுவாரு.

மச்சானை கூட்டிட்டு வர்லாம்னு பாத்தா அவரு ஒரு கொள்ளைக்கார கும்பல்கிட்ட கூலி வேலை பாக்குற விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரியவருது. அந்த கொள்ளைக் கும்பல் ராஜனை லவுகீக வாழ்க்கைக்குப் போகவிடாம கத்தியைக் காட்டி காட்டி மிரட்டுது. இப்படியே போய்ட்டு இருக்க, ஒரு கட்டத்துல எம்.ஜி.ஆர் பார்வை தெரியாத தங்கைக்கு பார்வையும், ஆசைப்பட்ட வாழ்க்கையும், ராஜனுக்கு விடுதலையும் வாங்கிக்கொடுக்கிறாரு. எம்.ஜி.ஆர்ங்கிற ஒரு தனி மனுஷன் அதிகபட்ச வேலை பார்த்த படம்.

5 . கட்டுனா கண் பார்வை இல்லாத ரேவதியைத்தான் கட்டுவேன்னு ரஜினி ஒத்தைக் கால்ல நின்ன படம்தான் ’கை கொடுக்கும் கை’ அப்ப்டி பிடிவாதமா நிக்கிறதுக்கு காரணம், பார்வை இல்லாத ரேவதி முகத்தைப் பார்த்துட்டுப்போனா கூடாத கல்யாணம் கூடுதுன்னும், கிடைக்காத வேலை கிடைக்குதுன்னும் மூடநம்பிக்கைல மூளைய ஊரவெச்ச அந்த ஊர் ஜனம்தான். அதை மீறித்தான் வசதியான ரஜினி ஏழை ரேவதிய மேரேஜ் பண்ணிக்குறாரு.

அதுக்கப்புறம் ஊரைவிட்டு ரஜினி – ரேவதியை தள்ளிவெச்சி யாரும் அன்னம்தண்ணி புழங்கக்கூடாது, அரிசி பருப்பு விற்கக்கூடாதுன்னு ஊர் கட்டுப்பாடுன்னு உத்தரவு போடுறாங்க. அதைவிட ரஜினிக்கு ரேவதி ஒரு கண்டிஷன் போடுறாங்க. பாருங்க அங்கதான் கதை நிக்குது. ’நான் செத்துட்டா என் பாடிய நீங்கதான் ஒத்தை ஆளா குளிப்பாட்டணும், ஒத்த பொம்பளைகூட கிட்ட சேர்க்க்க்கூடாது’ன்னு சொல்ற சீன்ல ரஜினி மட்டுமில்ல, தாய்குலங்களும் தாறுமாறா அழுகாச்சிய ஆறாக்கின படம். ’கை கொடுக்கும் கை’

- எம்.ஜி.கன்னியப்பன்.

Tamil Cinema
Tamil Cinema : வாடகைக்கு காதலிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் - ஒரு நக்கலான லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com