'நான் யார் தெரியுமா?, எங்க ஏரியா, ஏஏஏய்' - தமிழ் சினிமா டெம்ப்ளட் வசனங்கள்

இந்த மாதிரி வசனங்கள் எல்லா படத்துலேயும் ரிப்பீட் மோட்லேயே இருக்கும். இந்த ரிப்பீடட் வசனங்களுக்கு ரிப் போடுற ஆர்டிக்கிள்தான் பாஸ் இது.
தமிழ் சினிமா
தமிழ் சினிமாடைம்பாஸ்
Published on

தமிழ் சினிமாவில் சில வசனங்களை ஏன் பேசுறாங்க, எதுக்கு பேசுறாங்கன்னு தெரியாமலேயே பேசிக்கிட்டு இருப்பாங்க. படம் எந்த ஜானரா இருந்தாலும் சரி, சில டைப் ஆஃப் வசனங்களை மட்டும் அடிக்கடி யூஸ் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.

இந்த மாதிரி வசனங்கள் மட்டும் எல்லா படத்துலேயும் எப்பவும் ரிப்பீட் மோட்லேயே இருக்கும். அந்த மாதிரி சில ரிப்பீடட் வசனத்துக்கு எல்லாம் ரிப் போடுற ஆர்டிக்கிள்தான் பாஸ் இது. பேசுவீர்களா... இனி பேசுவீர்களா?

ஆனந்தக் கண்ணீர் :

என் பொண்ணோட கண்ணுல ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்னு கிட்டத்தட்ட தமிழ்ல வந்த முக்கால்வாசிப் படத்துல கண்டிப்பா சொல்லி இருப்பாங்க. இந்த டயலாக்தான் இதுவரைக்கும் அதிகமுறை யூஸ் பண்ணின சினிமா டயலாக்கா இருக்கும்.

தமிழ் சினிமா
'ஆகா.. நமக்கு வயசாகிடுச்சு போலயே' - அறிகுறிகள் ஒரு லிஸ்ட்

பழைய சிவாஜி காலத்து படத்துல ஆரம்பிச்சு டி.ஆர் படம் வழியா ட்ராவல், ஆகி, இப்போ இருக்கிற ஜெனரேஷன் படங்கள் வரைக்கும் இந்த டயலாக் பரவி இருக்கு. அதெல்லாம் சரி பாஸ்... கண்ணுல வர தண்ணில, எது ஆனந்தக் கண்ணீர்? எது ஃபீலிங் சேட் கண்ணீர்? ப்ளீஸ் அழ வைக்காதீங்க ஃப்ரெண்ட்.

நான் யார் தெரியுமா? :

ஹீரோ வில்லனைப் பார்த்து கோபமாக `நான் யார் தெரியுமா?'ன்னு சொல்ற டயலாக்தான் அடுத்த முக்கியமான டயலாக். கோலிவுட்ல கிட்டத்தட்ட எல்லா ஹீரோவும் இந்த டயலாக்கை அவங்க லைஃப்ல ஒரு டைமாச்சும் சொல்லி இருப்பாங்க.

படத்தோட ஆரம்பத்துல இந்த வசனத்தைச் சொல்ல ஆரம்பிச்சாங்கனா க்ளைமாக்ஸ் வரைக்கும் சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க.

படத்துல ஹீரோவுக்கு எத்தனை பிரேக் அப் ஆகியிருக்குங்கிற அளவுக்கு வில்லனுக்கு விவரம் தெரிஞ்சிருக்கும். ஆனா, அப்போகூட ஹீரோ நான் யார் தெரியுமான்னுதான் டயலாக் பேசுவார். நீங்களே சொல்லுங்க அவர் யார் தெரியுமா..?

எங்க ஏரியா :

`யார் ஏரியால வந்து யார்கிட்ட சீன் போடுற', `ஏய் இது எங்க ஏரியா'ங்கிற மாதிரி தமிழ் சினிமாவில் நிறைய டயலாக் வருது. இந்த மாதிரி வர்ற டயலாக்கைக் கணக்கு எடுத்துப்பார்த்தா, கிட்டத்தட்ட தமிழ்நாட்டுல உள்ள எல்லா ஏரியாவிலேயும் யாரோ ஒருத்தங்களோட கன்ட்ரோல்லதான் இருக்கு.

ஏன் யாருமே இல்லாத `டிமாண்டி காலனி' கூட ஒரு வெளிநாட்டுப் பேயோட கன்ட்ரோல்லதான் பாஸ் இருக்கு. ஆக மொத்தத்துல ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு ஏரியாவை கன்ட்ரோல்ல வெச்சு இருக்காங்க. பட், இந்த மதுரையைத்தான் நிறையப் பேர் கன்ட்ரோல் வெச்சு இருக்காங்க.

உன்னைப் பார்த்ததும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன் :

நம்ம கோலிவுட் கலாசாரத்துல ரொம்ப காலமா இருக்கிற சம்பிரதாயம்தான் இந்தக் கண்டதும் காதல். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எல்லா ஹீரோவுக்கும் கண்டதும் காதல் வந்துடும்.

தமிழ் சினிமா
சினிமா விடுகதைகள்: ரெட்டை வேட அஜித் ஸ்பெஷல்

சில சமயம் ஹீரோயினுக்கும் ஆச்சர்யமா காதல் வரும். பட், இந்தக் காதல் வர்றதுல எந்தப் பிரச்னை ஆஃப் பிராப்ளமும் இல்லை. ஆனா, அதைச் சொல்லுறப்போ உன்னைப் பார்த்ததும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு ஒரே மாதிரி எல்லா படத்துலயும் சொல்றதுதான் டென்ஷன் ஆகுது ஃப்ரெண்ட். ஏன் ப்ரோ... கண்டதும் காய்ச்சல் வரும் இல்லைனா கண் வலி வரும். காதல்லாமா வரும்?

ஏஏஏய் :

ஹீரோவோ, வில்லானோட ஆட்களோ யாரா இருந்தாலும் ஃபைட்டுக்கு போறத்துக்கு முன்னாடி கண்டிப்பா இந்த ``ஏஏஏய்'' வசனத்தைப் பேசிடுவாங்க. இந்த வசனம் பார்க்கிறத்துக்கு என்னதான் சின்ன வசனம் மாதிரி தெரிஞ்சாலும் சொல்றப்போ `வாட்ஸ்அப்ல வரும் ஃபார்வேர்ட் மெசேஜ்' மாதிரி நீளமா போகும்.

தமிழ் சினிமா
சினிமா விடுகதை : ‘தில்’ இருந்தாலும் ‘உதை’படுவார், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்ல'

படத்துல ஒவ்வொரு ஃபைட் வர்றதுக்கும் முன்னாடி எல்லோரும் கண்டிப்பா ஒரு டைம் `ஏஏஏய்'னு சொல்லிடுவாங்க. இந்த ஏஏஏய்ல இன்ஸ்பயர் ஆகித்தான் சரத்குமார் `ஏய்' படமே எடுத்தார் பாஸ். எங்கே சேர்ந்துச் சொல்லுங்க ஏஏஏய்..!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com