'HBO ஏழுமலை, சுட்டிக்குமார், ஜெயா பாலன்' - டி.வி சேனல் ஃப்ரெண்ட் லிஸ்ட்!

எல்லா கேங்லேயும் டி.வி சேனல்களோட மேனரிஸங்களை உரிச்சு வெச்ச மாதிரியே சில நண்பர்கள் இருப்பாங்க. உங்க கேங்லேயும் இப்படி நண்பர்கள் இருக்காங்களா ஃப்ரெண்ட்ஸ்?
டி.வி சேனல்
டி.வி சேனல் டைம்பாஸ்

எல்லா கேங்லேயும் டி.வி சேனல்களோட மேனரிஸங்களை உரிச்சு வெச்ச மாதிரியே சில நண்பர்கள் இருப்பாங்க. உங்க கேங்லேயும் இப்படி நண்பர்கள் இருக்காங்களா ஃப்ரெண்ட்ஸ்?

ராஜ் ராஜன் :

சின்ன வயசுல இருந்து நம்மகூடவேதான் இருப்பான். விளையாடக் கூப்பிட்டா, கூப்பிட்டதுக்காக வந்து விளையாடுவான். படத்துக்குக் கூப்பிட்டா, தியேட்டர்ல வந்து `தேமே'ன்னு உட்கார்ந்திருப்பான்.

`இவன் என்னதான் பண்றான்; ஆக்சுவலா இவனோட நோக்கம்தான் என்ன?'ன்னு அவங்க வீட்டுல உள்ளவங்களாலேயே கண்டுபிடிக்க முடியாது. தம்பி ராமையா பாணியில சொல்லணும்னா, அப்படியே இருக்கிற இடம் தெரியாம இருக்கிறதையே வேலையாக வெச்சிருப்பான்.

எச்.பி.ஓ. ஏழுமலை :

எப்போ பார்த்தாலும், ‘ஜி அதுல டைனோசர் சீன் சி.ஜிலாம் செமையா இருக்கும் பார்த்திருக்கீங்களா?', `போன வாரம் ஒரு படம் பார்த்தோமே, அந்த டைரக்டர் பேரு என்ன டக் லீனா, கெவின் ஜோசப்பா?’னு ஒரே ஹாலிவுட் படம் பத்திதான் பேசுவான்.

ஏதாவது உதாரணம் சொல்றதுக்குக்கூட `இப்படித்தான் ஒரு இங்கிலீஷ் படத்துல என்னாச்சுனா...'னு ஆரம்பிப்பான்.

டி.வி சேனல்
தமிழ் சினிமா மட்டும் இல்லன்னா?

தந்தியப்பன் :

கேங்ல எந்நேரமும் சளைக்காம லொட லொடான்னு பேசிக்கிட்டே இருப்பான். நாம எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் அடுத்த நிமிஷமே என்னுடைய நினைவு சரியாக இருந்தால், ‘ஆக்சுவலா உண்மை என்னன்னா’, ‘நான் என்ன சொல்ல வாரேன்னா’னு ஆர்க்யூ பண்ண ஆரம்பிச்சிடுவான்.

இவனுக்கு வாய் வலிக்குமா, வலிக்காதான்னு நாம யோசிச்சுக்கிட்டு இருந்தாலும் கூலாக ரெண்டு வடையை வாங்கித் தின்னுட்டு திரும்பவும், `அதாவது நான் சொல்ல வர்றது என்னான்னா...'னு ஆரம்பிச்சுடுவான்.

ஜெயா பாலன் :

வாயைத் திறந்தா அவங்க வீட்டுக்கதையைத் தவிர வேற எதுவுமே சொல்ல மாட்டான். காலையில வீட்டுல செஞ்ச டிஃபன்ல இருந்து வீட்டுக்கு விருந்தாளியாக வந்த சின்னம்மா, பெரியம்மா வரைக்கும் கதை கதையா சொல்லிட்டிருப்பான். மத்த ஃப்ரெண்ட்ஸ் பற்றிப் பேசினாலே அவனுக்கு ஆட்டோமேட்டிக்கா அலர்ஜி ஆகிடும்.

டி.வி சேனல்
'தர்மத்தின் வாழ்வுதனை...' - அரசியல் பஞ்ச் வசனங்கள் ஒரு லிஸ்ட்

விஜயன் :

கேங்கில் இருக்கிறதுலேயே கொஞ்சம் கலகலப்பாக இருக்கிறவன் இவன்தான். ஆடுவான், பாடுவான், பாடிட்டே ஆடுவான். எந்நேரமும் ஒரே ஹைஃபர் ஆக்டிவாகவே இருப்பான்.

ஆனா, அவன்கிட்ட உள்ள ஒரே பிரச்னை... ஏதாவது கதை சொல்ல ஆரம்பிச்சான்னா அவ்வளவுதான்; விடவே மாட்டான். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி வெறும் காதை சிவப்புக் காதா ஆக்கிடுவான். அதுல மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்.

ஃபேஷன் ப்ரியா :

பீச்சுக்குப் போயி உச்சந்தலையில மண்ணை அள்ளிப் போட்டு விளையாடப்போறதுக்குக்கூட ஒன்றரை இன்ச் மேக்கப் ஏத்திக்கிட்டுதான் வருவா. சின்ன வயசுல ஓட்டிக்கிட்டு திரிஞ்ச டயர் வண்டியை மறக்கக்கூடாதுன்னு அதையே ரெண்டு காதிலேயும் தோடுங்கிற பேர்ல மாட்டிக்கிட்டு திரிவா.

கிரவுண்ட் ஃப்ளோர்ல இருந்து மொட்டை மாடிக்குப் போறதைக்கூட அவுட்டிங்கா நினைச்சுக்கிட்டு மேக்கப் போட ஆரம்பிச்சுடுவா.

டி.வி சேனல்
‘வாஷிங் பவுடர் நிர்மா, ப்ரீத்திக்கு நான் கியாரன்டி' - அந்த கால விளம்பரங்கள் ஒரு லிஸ்ட்!

சுட்டிக்குமார் :

குரூப்பில் இருக்கிறதுலேயே பேன்ட் பாக்கெட்டுக்குள்ள எந்நேரமும் கமர்கட்டு, கல்கோனான்னு ஸ்டோர் பண்ணி வெச்சுத் திங்கிற பையன்னா அவன் இவன்தான்!

நம்மகூட இவன் சுத்துறதைவிட இவனைவிட சின்னப் பசங்களா ஏரியாவுக்குள் திரியற நண்டு சிண்டுகளோடதான் அதிகமா சகவாசம் வெச்சிருப்பான். சும்மா லைட்டா காலய்ச்சாக்கூட `இரு எங்க அம்மாக்கிட்ட சொல்லுறேன்'னு சொல்லிட்டு அநியாயத்துக்கு கோவிச்சுக்கிட்டுப் போவான்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com