NTR30 : 'அண்ணா தினமும் Update கொடுக்க முடியாதுண்ணா' - Jr NTR வேண்டுகோள்

எதாவது அப்டேட் இருந்தால் எங்கள் மனைவியிடமும் எங்கள் குடும்பத்தினரிடம் சொல்வதற்கு முன்பாகவே உங்களுக்குதான் முதலில் சொல்கிறோம்.
NTR30
NTR30Jr NTR
Published on

தற்போது சினிமா உலகில் அப்டேட் கேட்கும் கலாச்சாரம் வெகுவாக பரவியுள்ளது. முன்னதாக, அஜித் குமாரின் வலிமை படத்திற்கு அப்டேட் கேட்டுக் கேட்டு, அதை ஒரு சமூக பிரச்சனையாகவே மாற்றினார்கள். இந்த அப்டேட் கேட்கும் கலாச்சாரத்தால், புலம்பாத இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இல்லை. இந்த புலம்பல் இப்போது, பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-ஐயும் விட்டு வைக்கவில்லை.

நேற்று முன்தினம் (பிப்., 05), நடிகர் கல்யாண் ராம் நந்தமுரியின் அமிகோஸ் படத்தின் விழாவில் ஜூனியர் என்.டி.ஆரும் பங்கேற்றார். அவ்விழா மேடையில், நடிகர் கல்யாண் ராம் நந்தமுரி மற்றும் அமிகோஸ் படக்குழுவினரைப் பற்றி ஜூனியர் என்.டி.ஆர் பேசிக் கொண்டிருந்தார்.

NTR30
'தெலுங்கு சினிமா vs தெலுங்கு அரசியல்' - டைம்பாஸ் மீம்ஸ்

அப்போது, அவரின் அடுத்த படமான NTR30 குறித்த அப்டேட் தாருங்கள் என்று அவரது ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, “உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் போதே, அப்படத்தைப் பற்றிய தகவல்கள் எதையும் வெளியிட்டுக்கொண்டே இருக்க முடியாது என்பதை நேர்மையாகவே உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன். தினமும், ஒவ்வொரு மணிநேரமும் புதுப்புது அப்டேட்களைக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது. அது கடினமானது" என்று தெரிவித்துள்ளார்.

"உங்களுக்கு இருக்கும் ஆர்வம் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால், இப்படி அப்டேட் கேட்டுக்கொண்டே இருப்பது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரிய அழுத்தத்தையே கொடுக்கிறது. உங்களுக்காக அப்படியெல்லாம் உடனுக்கு உடனேயே அப்டேட் கொடுத்துக்கொண்டே இருக்க முடியாது. அப்படியே எதாவது ஒன்றை அப்டேட் என்று சொல்லி வெளியிட்டு அது உங்களுக்கு பிடிக்காமல் போனால், அதை இணையத்தில் வைத்து ட்ரோல் செய்துவிடுகிறீர்கள். இது எனக்கு மட்டுமல்ல. எல்லா திரைக்கலைஞர்களும் அழுத்தத்தையே தருகிறது" என்று அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், "எதாவது அப்டேட் இருந்தால் எங்கள் மனைவியிடமும் எங்கள் குடும்பத்தினரிடம் சொல்வதற்கு முன்பாகவே உங்களுக்குதான் முதலில் சொல்கிறோம். காரணம், நீங்கள்தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். படம் குறித்த உறுதியான அப்டேட் இருந்தால் கண்டிப்பாக வெளியிடுவோம். சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளை வைத்து தயாரிப்பாளர்கள் மீது எந்த அழுத்தத்தையும் திணிக்காதீர்கள்” என்று ஜூனியர் என்.டி.ஆர். வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர்-இன் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

NTR30
தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா - வித்தியாசங்கள பார்ப்போமா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com