Titanic : ஏலத்திற்கு வரும் டைட்டானிக் கப்பலின் Menu Card - சுவாரஸ்ய பின்னணி!

முதல் வகுப்பு பயணிகளுக்கான இரவு நேர உணவுக்கான மெனு இது. இதில் சிப்பிகள், ஆட்டிறைச்சி, வாத்துக்கறி போன்றவை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Titanic
Titanic timepass

பொதுவாகவே கப்பல் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வரும் பெயர் ‘டைட்டானிக்’. டைட்டானிக் மூழ்கிய துயர சம்பவம் நூற்றாண்டைக் கடந்த பிறகும் இன்றளவும் நம் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்திலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த இக்கப்பல் பனிப்பாறை மோதி அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இது ஒரு பேரழிவாக கருதப்பட்டது. அதில் பயணித்த ஆயிரக்கணக்கான மக்களும், விலைமதிப்பற்ற பொருட்களும் கடலுக்கு இரையாகின.

இச்சம்பவத்தை மையமாக வைத்து ‘டைட்டானிக்’ என்ற பெயரில் கற்பனை கலந்த காதல் படம் ஒன்றும் எடுக்கப்பட்டது. இக்கப்பலுடன் கடலில் மூழ்கிய சீன தட்டுகள், கப்பலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள், கடிதங்கள், கடிகாரங்கள், வயலின், பைனாக்குலர் என பல பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இக்கப்பலின் மெனுவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வந்தது. அது, அக்கப்பலில் பயணித்த முதல் வகுப்பு பயணிகளுக்கான இரவு நேர உணவுக்கான மெனு என்று கூறப்படுகிறது. அதில் சிப்பிகள், ஆட்டிறைச்சி, வாத்துக்கறி போன்றவை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Titanic
Titanic ஜாக்கும் ரோஸும் பிரியாம சேர்ந்தா? - டைம்பாஸ் ஸ்டோரி

வெளிவந்துள்ள அறிக்கைகளின்படி, 11 ஏப்ரல், அயர்லாந்தின் கோப் நகரிலிருந்து, நியூயார்க் நகரத்திற்கு கப்பல் கிளம்பிய பிறகு அன்றிரவிற்கான மெனு என்று நம்மால் அறியமுடிகிறது. மேலும், ஐரிஷ் நகரம் தான் டைட்டானிக் கடைசியாக தொடர்பு கொண்ட துறைமுகமாகவும், அதற்கு பிறகே கப்பல் பாதிப்பிற்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிபிசி- யின் அறிக்கையின்படி, இந்த மெனு சுமார் £50,000 முதல் £70,000 வரை (51 லட்சம் முதல் 71 லட்சம் வரை) ஏலத்தில் விற்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மெனுகார்ட், 16 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலமும் கொண்டது. அதில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அக்கப்பலின் கொடி பொறிக்கப்பட்டுள்ளது.

“RMS டைட்டானிக் என்று அக்கப்பலின் பெயருடன், OSNC (Ocean Steamship Navigation Company) என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும்,” என்று அயர்லாந்தின் ஒரு பத்திரிக்கை நிறுவனமான RTE அறிக்கை வெளியிட்டுள்ளது.

Titanic
TITANIC house: 13 வருடங்களாய் 'டைட்டானிக் கப்பல்' வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் விவசாயி!

இந்த மெனு, லென் ஸ்டீபென்சன் என்ற ஒரு வரலாற்று ஆர்வலரின் புகைப்பட ஆல்பத்திலிருந்து அவரது மகள் மற்றும் மருமகனால் கண்டுபிடிக்கப்பட்டது. “உலகிலுள்ள டைட்டானிக் சின்னங்களின் முன்னணி சேகரிப்பாளர்கள் மற்றும் பல அருங்காட்சியங்களுடன் கலந்துரையாடிய பிறகு, டைட்டானிக் கப்பலின் ஏப்ரல் 11, இரவு உணவு மெனுவின் எஞ்சியிருக்கும் ஒரே சான்று இதுவே என்று எங்களால் உறுதியாகக் கூறமுடிகிறது” என்று ஏலதாரர் ஆண்ட்ரியூ அல்ட்ரிஜ் கூறியுள்ளார்.

இது ஒரு சாதாரண சாப்பாட்டு மெனுவாகக் கருதப்பட்டாலும், டைட்டானிக் கப்பலை பொறுத்தவரை இது எஞ்சியிருக்கும் ஒரு முக்கிய வரலாற்று எச்சமாகும். எனவே, பழம்பொருள் சேகரிப்பாளர்களிடம் ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- ர. பவித்ரா.

Titanic
Titanic : பதற வைக்கும் Ocean Gate விபத்து - உண்மையில் நடந்தது என்ன ? | Titan submersible

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com