வார இறுதியும் வந்துவிட்டது. வெயில் காலமும் தொடங்கி விட்டது. அதனால் இந்த வாரம் வெளியில் சென்று பொழுதை போக்குவதற்கு வாய்ப்பில்லையா?
இதோ வந்துவிட்டது! இந்த வார இறுதி நாட்களை கழிக்க இன்ட்ரஸ்டிங்கான திரைப்படங்கள் மற்றும் சீரியஸ்கள்.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்:
1. கண்ணை நம்பாதே (Kannai Nambathey)
தமிழில் மார்ச் 17ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆத்மிகா நடிப்பில் மு. மாறன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது.
2. கோஸ்டி ( Ghosty)
தமிழில் மார்ச் 17ஆம் தேதி காஜல் அகர்வால், யோகி பாபு, ராதிகா சரத்குமார் நடிப்பில் மற்றும் எஸ்.கல்யாண் இயக்கத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
3. பலான அப்பையி பலான அம்மையி ( Phalana Abbayi Phalana Ammayi)
ஸ்ரீனிவாசன் அவசராலா இயக்கத்தில் நாகார் சீனிவாஸ், அவசரால, நாக சௌரியா நடிப்பில் தெலுங்கில் மார்ச் 17ஆம் தேதி வெளியானது.
4. கப்ஜா ( Kabzaa)
கன்னடத்தில் மார்ச் 17ஆம் தேதி R.சந்துரு இயக்கத்தில் உபேந்திரா, சிவா ராஜ்குமார், ஸ்ரியா சரண் நடிப்பில் வெளியானது.
5. Mrs. சட்டர்ஜி விஎஸ் நார்வே ( Mrs. Chatterjee vs Norway)
இந்தியில் மார்ச் 17ஆம் தேதி அஷிமா சிப்பர் இயக்கத்தில் ராணி முகர்ஜி, அனிர்பன் பட்டச்சாரியா, நீனா குப்தா, மற்றும் ஜிம் சர்பு நடிப்பில் வெளியானது.
6. ஜ்விகாட்டு ( Zwigato)
இந்தியில் மார்ச் 17ஆம் தேதி நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில் சர்மா மற்றும் சஹானா கோஸ்வாமி நடிப்பில் வெளியானது.
7. ஷாஜம் ஃப்யூரி ஆஃப் த காட்ஸ் ( Shazam! Fury of the gods)
ஆங்கிலத்தில் மார்ச் 17ஆம் தேதி டேவிட் எஃப். சான்ட்பெர்க் இயக்கத்தில் சக்கரி லெவி, ஆஷர் ஏஞ்சல் நடிப்பில் வெளியானது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்
1. ஷாதி கனி ரெண்டு எக்கராளு ( Sathi gani Rendu Ekaralu)
தெலுங்கில் ஆஹாவில் ( Aha) மார்ச் 17ஆம் தேதி அபினவ் தண்டா இயக்கத்தில் ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, மோகன ஸ்ரீ சுரகா நடிப்பில் வெளியானது.
2. ஏம் ஐ நெக்ஸ்ட் ( Am I Next)
இந்தியில் ஜி5வில் (Zee5) மார்ச் 17ஆம் தேதி ஷிரீஷ் கெமரியா இயக்கத்தில் அனுஷ்கா சென், மிர் சர்வார் நடிப்பில் வெளியானது.
3. இன் ஹிஸ் ஷேடோ ( In his Shadow)
ப்ரென்சில் நெட்லி (Netflix) மார்ச் 17ஆம் தேதி மார்ச் பவுச்சர் இயக்கத்தில் காரி அசாஸ் இல்லா நடிப்பில் வெளியானது
திரையரங்குகளில் வெளியாகி இந்த இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் :
1. பிளாக் ஆடம் ( Black Adam)
ஆங்கிலத்தில் பிரைமில் ( Prime) மார்ச் 15ஆம் தேதி ஜாமே கலெக்ட் செர்ரா இயக்கத்தில் டுவைன் ஜான்சன் மற்றும் ஆல்டிஸ் ஹாட்ஜ் நடிப்பில் வெளியானது.
2. குட்டே ( Kuttey)
இந்தியில் நெட்பிலிக்ஸில்( Netflix) மார்ச் 16ஆம் தேதி ஆஸ்மான் பாரத்வாஜ் இயக்கத்தில் தபு, அர்ஜுன் கபூர் நடிப்பில் வெளியானது.
3. த வேல் ( The whale)
ஆங்கிலத்தில் சோனி லைவில் ( Sony LIV) மார்ச் 16ஆம் தேதி டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கத்தில் பிரெண்டன் ஃப்ரேசர் மற்றும் சாடி சின்க் நடிப்பில் வெளியானது.
4. வாத்தி ( Vaathi)
தமிழில் நெட்பிலிக்ஸில் ( Netflix) மார்ச் 17ஆம் தேதி வென்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடிப்பில் வெளியானது.
5. ரைட்டர் பத்மபூஷன் ( Writer Padmabhushan)
தெலுங்கில் ஜி5வில் ( Zee5) மார்ச் 17ஆம் தேதி சண்முக பிரசாந்த் இயக்கத்தில் வெளியானது
6. கந்தாடகுடி( Gandhadagudi)
கன்னட மொழியில் பிரைமில் (Prime) மார்ச் 17ஆம் தேதி அமோகவர்ஷா JS இயக்கத்தில் புனித் ராஜ்குமார் மற்றும் அமோகவர்ஷா நடிப்பில் வெளியானது. இது புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய ( Docudrama) ஆவணப்படமாகும்.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சீரிஸ்கள்
1. ராக்கெட் பாய்ஸ் சீசன் 2 ( Rocket Boys S2)
ஹிந்தியில் சோனி லைவ் (Sony LIV) மார்ச் 16ஆம் தேதி அபே பண்ணு இயக்கத்தில் ஜிம்சார்ப் மற்றும் இஷ்வாக் சிங் நடிப்பில் வெளியானது.
2. ஷேடோ & போன் சீசன் 2 ( Shadow & Bone S2)
ஆங்கிலத்தில் மார்ச் 16ஆம் தேதி நெட்பிளிக்ஸில் (Netflix) வெளியானது.
3. க்ளாஸ் ஆப் '07 ( Class of '07)
ஆங்கிலத்தில் பிரைமில்(Prime) மார்ச் 16ஆம் தேதி எமிலி ப்ரவுனிங் மற்றும் மேகன் ஸ்மார்ட் நடிப்பில் வெளியானது.
4. லாக்டு சேப்டர் 2 ( Locked chapter 2)
தெலுங்கு மொழியில் ஆஹாவில் (Aha) மார்ச் 17ஆம் தேதி பிரதீப் தேவகுமார் இயக்கத்தில் சத்யதேவ் காஞ்சரானா, சம்யுக்தா ஹொர்னாடு நடிப்பில் வெளியானது.
5. பாப் கான்( Pop Kaun)
இந்தியில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) மார்ச் 17ஆம் தேதி ஃபர்கத் சம்ஜி இயக்கத்தில் வெளியானது.
6. தாம் சீசன் 2 ( Dom S2)
போர்ச்சுகீஸ் மொழியில் அமேசான் பிரைமில் மார்ச் 17ஆம் தேதி பிரெனோ சில்வெய்ரா மற்றும் ஆண்ட்ரே பாரஸ் இயக்கதில் கபிரியேல் லியோனி நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி, ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டுள்ளது.