90s Kids கிரிக்கெட்: 'Real Gentleman வீரர்கள்' - Episode 3

விராத் கோலிக்கு அக்ரஷன் மட்டும் அடையாளமில்ல. நல்ல விஷயங்களும்தான். பாகிஸ்தான் அணியுடன் ஆடுனப்போ, தன்னோட பேட்ட, அமீருக்கு, நல்லுறவ வளர்க்கற மாதிரி கொடுத்தாரு.
90s Kids கிரிக்கெட்
90s Kids கிரிக்கெட்டைம்பாஸ்
Published on

If மற்றும் Butகளுடைய ஏகோபித்த ஆதரவு பெற்ற வெப்சீரிஸ்தான் வாழ்க்கை. இதோட காட்சிகளைக் கட்டமைக்குற கூட்டுப் பொருட்கள்தான் கோபம், பயம் உள்ளிட்ட நவரசங்களும். இவை எல்லாத்தையுமே கிரிக்கெட்ல பார்த்திருக்கோம்னாலும், எல்லா ஹ்யூமன் எமோசன்ஸையும் பின்னாடி‌ தள்ளிட்டு தனியா ஸ்கோர் பண்றது, கருணை@அன்புன்ற கேட்டகிரிதான்.

சின்ன தல ரெய்னாட்ட இருந்து ஆரம்பிக்கலாங்களா? எந்தவொரு விக்கெட் விழுந்தாலும், பௌலர் அதக் கொண்டாடுறதுக்கு முன்னாடியே, ரெய்னா செலிபிரேட் பண்ணுவாரு.

ஒரு ஐபிஎல் போட்டியில, எதிரணி வீரரான, பண்ட் 100 அடிக்க மிஸ் பண்ணபோது அவரோட முகத்த கைல ஏந்தி, ஆறுதல் சொன்னது, தல தோனியோட பேட்ட மிதிச்சுட்டேனு அதத் தொட்டுக் கும்பிட்ட அந்த அன்புனு பாசக்கார பயபுள்ளங்க அவரு. அவர்ட்ட இருந்து டேக் டைவர்சன் போட்டு தோனிகிட்ட போங்க.

அவரும் இந்த Good Gesture genreக்கு புதுசில்ல. 2014 உலகக்கோப்பை போட்டி ஒண்ணுல கோலி சிறப்பா ஆடிருப்பாரு. அதனால அவருதான் வின்னிங் ஷாட் அடிக்கணும், அடுத்த ஓவர்ல முடிச்சுக்கலாம்னு வேணும்னே ஒரு டாட்பால் ஆடிட்டு அழகா கோலிய பார்த்து சிரிப்பாரு பாருங்க, அவரோட சிக்நேச்சர் ஹெலிகாப்டர் ஷாட்டோட முடிச்சிருந்தா வந்திருக்கதவிட அதிகமான லவ்வு ரசிகர்களுக்கு அவர்மேல வந்துச்சு. அப்டியே கோலிகிட்ட வாங்க!

90s Kids கிரிக்கெட்
தொடர்: 90-ஸ் கிட்ஸ கிரிக்கெட் - 'Street Cricket Rules'

அக்ரஷன் மட்டும் அவரோட அடையாளமில்ல. நல்ல விஷயங்களும்தான். பாகிஸ்தான் அணியுடன் ஆடுனப்போ, தன்னோட பேட்ட, அமீருக்கு, நல்லுறவ வளர்க்கற மாதிரி கொடுத்தாரு.

ஸ்மித் தடைக்குப் பிறகு திரும்பினப்போ, அவரப் பார்த்து  கேலி செஞ்ச இந்திய ரசிகர்கள்கிட்ட, "அமைதியா அவர உற்சாகப்படுத்துங்க"னு சொன்னது, ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்போட உச்சம். ஐசிசிட்ட அவரு வாங்குன எல்லா அவார்டையும்விட, இதுக்காக 2019ல வாங்குன ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்தான், எந்தவொரு வீரரும் சம்பாதிக்க வேண்டியது.

கோலிட்ட இருந்து ஸ்மித் பக்கம் திரும்புனா, தனக்குப் பந்துவீசுன இலங்கை பௌலர் நல்லா பௌலிங் பண்ணார்னு "Thumbs up" பண்றாரு, ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாடி போனா, கண்ணீர் மல்க, Phil Hughesக்கு தன்னோட சதத்தை அர்ப்பணிக்குறாரு. சதத்தோட மதிப்பு அங்கதான் பத்து மடங்காச்சு.

90s Kids கிரிக்கெட்
தொடர்: 90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் - கிரிக்கெட் கார்ட் அலப்பறைகள்

இலங்கையோட சுதந்திர தினத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட 2018 நிகாடஸ் டிராபிய ஜெயிச்ச பிறகு, இலங்கையோட கொடிய அசைச்சு, அந்த ரசிகர்கள சந்தோஷப்படுத்துன இந்திய அணிய பாராட்டுறதா, சமீபத்தில ஆஸ்திரேலியாயோட பேரசொல்லி அவங்கள Cheer up பண்ண இலங்கை ரசிகர்கள சொல்றதா?
நாடுகள் கடந்த நேசம்; இதுதான் ஸ்போர்ட்ஸ ஸ்பெஷல் ஆக்குது!!!
ஜெயிக்குறப்போ வர்ற Likes, தோற்கறப்போ Dislikes ஆகலாம், ஆனா, Good Spiritகாகக் கிடைக்குற ஹார்ட்டீன்கள், காலத்துக்கும் மாறாது.

மேல சொன்னதுல ஒரு விஷயத்த மிஸ் பண்ணியிருக்க மாட்டீங்க. அது எல்லாமே சங்கிலித் தொடரா ஒரு வீரர்ட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போயிருக்கும். தசாவதாரம், ஐரா புரியவச்ச, பட்டர்ஃப்ளை, டாமினோஸ் எஃபெக்ட் உள்ளிட்ட எல்லாமே சொல்ல வர்றது, ஒவ்வொரு நிகழ்வும் தொடர்புடையதுன்றததான்,

அன்பும் நேசமும் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு ஒளியோட திசைவேகத்தோட பயணிக்கும்னறயும்தான்!!!!

அந்தச் சங்கிலி அறுபடாம பார்த்துக்கிட்டாலே போதும்....

90s Kids கிரிக்கெட்
'Koffee with Modi' - இந்தியன் கிரிக்கெட் டீமுக்கு சில ஐடியாக்கள்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com