Pondicherry : Gpay இல் பணம் அனுப்பினால் சீட்டு எடுக்கும் கிளி - கலக்கும் பாண்டி ஜோசியர்கள்!

இங்கு கிளி ஜோதிடம், கைரேகை ஜோதிடம், சோழி ஜோதிடம், குறிச்சொல்லும் ஜோதிடம் என பல்வேறு முறையில் சுற்றுலா பயணிகளை கவர்கின்றனர். சிலர் மன நிறைவுக்காக ஜோதிடம் பார்க்கின்றனர்.
pondicherry
pondicherrytimepassonline

பணத்தை பார்த்து கிளி சீட்டு எடுப்பது அந்த காலம்... கூகுல் பேயில் பணம் அனுப்பும் ஒலியை கேட்டு கிளி சீட்டு எடுப்பது இந்த காலம்..

பழமையான ஜோஸியத்தில் புதுமையான வசூல்

தொழில்நுட்பம் உலகையே ஆட்டிவைக்கும் நிலையில் ஜோஸியகாரர்களையும் விட்டுவைக்கவில்லை. புதுச்சேரியில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அளவுக்கதிகமாக உள்ளது. அவர்களை மகிழ்விப்பதில் ஜோஸியகாரர்களின் பங்கு அதிகம். இங்கு கிளி ஜோதிடம், கைரேகை ஜோதிடம், சோழி ஜோதிடம், குறிச்சொல்லும் ஜோதிடம் என பல்வேறு முறையில் சுற்றுலா பயணிகளை கவர்கின்றனர். சிலர் மன நிறைவுக்காக ஜோதிடம் பார்க்கின்றனர். சிலர் ஜாலிக்காக ஜோதிடம் பார்க்கின்றனர்.

ARULMALAR MEDIA

முன்னெல்லாம் கிளி ஜோதிடம் பார்க்கும் போது கிளி முன்னால் காசு அல்லது பணத்தை போட்டால் மட்டுமே அவர்களுக்கான சீட்டை எடுக்கும். ஆனால் தற்போது புதுச்சேரியில் அந்த நிலைமை மாறி கூகுல் பேயில் பணம் செலுத்தியதற்க்கான ஒலி வந்த உடனே கிளி சீட்டை எடுக்க ஆரம்பித்து விடுகின்றது. கையில் காசு பணம் இல்லை என்ற பிரச்சனை புதுச்சேரியில் இல்லை. கூகுல் பேயில் பணத்தை அனுப்பிவிட்டு ஜோஸியம் பார்த்துச் செல்லலாம்.

- அ.குரூஸ்தனம்.

pondicherry
Tamil Cinema வின் சேடிஸ்ட் வில்லன்கள் - மிரள வைக்கும் ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com