Amazon
Amazonடைம்பாஸ்

Amazon : ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலையில் சேரும் பீகார் மாணவர்!

பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ள அபிசேக் குமாருக்கு ரூ.1.8 கோடி சம்பளத்தில் அமேசானில் வேலை கிடைத்து உள்ளது.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவின் ஜஜ்ஜா பகுதியைச் சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ளார். இவருக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.1.8 கோடி சம்பளத்தில் அமேசானில் வேலை கிடைத்து உள்ளது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இதற்கான அறிவிப்பை அபிசேக்கிற்கு அமேசான் தெரிவித்தது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அபிசேக் கோடிங் தேர்வில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின்னர், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி 3 சுற்றுகள் கொண்ட ஒரு மணிநேர நேர்காணலிலும் கலந்து கொண்டார். அதில், வெற்றியும் பெற்று உள்ளார்.

அபிசேக்கிடம் ஜெர்மனி மற்றும் அயர்லாந்து நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் நேர்காணலை நடத்தி உள்ளனர். இதில், பிளாக்செயின் பற்றி விவரமுடன் கூறி அவர்களிடம் நன்மதிப்பை பெற்று உள்ளார். இதனால், அவருக்கு இந்த வேலை கிடைக்க வழியேற்பட்டுள்ளது.

அபிசேக்கிற்கு முன்னர், பாட்னா என்.ஐ.டி.யை சேர்ந்த அதிதி திவாரி என்பவருக்கு, ஆண்டுக்கு ரூ.1.6 கோடி சம்பளத்திற்கு பேஸ்புக்கில் இருந்து வேலை கிடைத்தது. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படித்தவரான மாணவி அதிதியின் தாயார் அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

அவரது தந்தை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதிதிக்கு முன்பு, பாட்னா என்.ஐ.டி.யில் படித்த சம்பிரீத்தி யாதவ் என்ற மாணவிக்கு கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.11 கோடி சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.

Amazon
Ooty : ஆவின் பால் விலையுயர்வு - பிள்ளையார் சிலையிடம் மனு அளித்த மக்கள்!

Related Stories

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com