இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் கிடைக்காத பெரும் தனிச்சிறப்பை நடிகை மீனா பெற்றுள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் உலக நாடுகள் மோதும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற விழாவில் அதற்கான கோப்பையை நடிகை மீனா அந்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கணவர் வித்யாசாகர் மறைவிற்குப் பிறகு பெரும் துயரத்தில் இருந்த நடிகை மீனாவுக்கு, தமிழ் திரையுலகினர் இணைந்து நிகழ்ச்சி நடத்தி மீனாவை உற்சாகப்படுத்தினர்.
இதுவரை எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமையும், அங்கீகாரமும் தனக்கு கிடைத்திருப்பதாகவும் இந்த உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை அறிமுகப்படுத்துவதில் தான் பெரும் பாக்கியம் பெற்றுள்ளதாகவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலக அதிசயங்களை ஒன்றான ஈபில் டவருக்கு கீழே நின்று உலக கோப்பை போட்டிக்கான கோப்பையை அறிமுகப்படுத்தி, தான் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆத்திருக்கிறார் நடிகை மீனா.
இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த நடிகை மீனா, "ஐ.சி.சி சார்புல சில அதிகாரிகள் என்னைத் தொடர்புகொண்டு வேர்ல்ட் கப்ப அறிமுகப்படுத்தி வைக்கணும்னு கேட்டுக்கிட்டாங்க. கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், ஐ.சி.சி அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள்னு பல பேரு அந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டாங்க. தோனிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சென்னைல ஐ.பி.எல் மேட்ச் எல்லாம் தெறியா இருந்துச்சு." என்று தெரிவித்துள்ளார்.
- மோ.நாக அர்ஜுன்.