Dhoni யால் வைரலான Candy Crush - 3 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் பதிவிறக்கம் !

இதன் விளைவாக அடுத்த 3 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் புதிதாக கேண்டி கிரஷ் விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்கியுள்ளனர்.
Dhoni
Dhonitimepass
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கேண்டி கிரஷ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வீடியோ ஒன்று சமூக தலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன் ஓய்வுக்கு பிறகு தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது.

இந்நிலையில், தோனி தனது மனைவுயுடன் நேற்று இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு விமானப்பணிப்பெண் சாக்லெட் கொடுத்துள்ளார். இதை வாங்கிக்கொண்ட தோனி அவருக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் தோனி தனது டேப்லெட்டில் கெண்டிகிரஷ் கேம் விளையாடிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதன் விளைவாக அடுத்த 3 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் புதிதாக கேண்டி கிரஷ் விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்கியுள்ளனர்.

இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ள கேண்டி கிரஷ் நிறுவனம், “உங்களால் தான் நாங்கள் டிரெண்டாகியுள்ளோம். நன்றி.” எனத் தெரிவித்துள்ளனர்.

Dhoni
Thala Dhoni க்கு Chocolate கொடுத்த விமான பணிப்பெண் - வீடியோவை வைரலாக்கிய Dhoni fans !
Timepass Online
timepassonline.vikatan.com