'பேச்சுலர் வாழ்க்கைனா என்னனு நெனச்ச?' - An Untold Story of பூந்துறை பழனிக்கண்ணு

கலர் மங்குன டி-ஷர்ட்டையும், கோக்குமாக்கா ஒரு த்ரீ ஃபோர்த்தையும் போட்டுக்கிட்டு கையில ஒரு கப் கோக்-கோட ஸ்கைவாக், எக்ஸ்பிரஸ் அவென்யூனு நடைபோட்டா, நீதான்டா யூத்து!
பேச்சுலர்
பேச்சுலர்டைம்பாஸ்
Published on

‘‘நான் கல்யாணமே பண்ணி இருக்கக் கூடாது’’னு ஒலக நாயகன் கமல்ஹாசனே சொல்லி இருக்காரே, அது எவ்வளவு தூரம் உண்மைங்கிறதை விளக்கத்தான் இந்த வெள்ளியங்கிரியோட கதை.

பூந்துறை பக்கம் ராக்காயி பாளையம்தான் வெள்ளியங்கிரியோட நேட்டிவ். பத்தாங் கிளாஸ் முடிச் சதும் அப்பச்சியோட பேங்க் பேலன்ஸை ஆட்டையப் போட்டு நாலு கறவை மாடுகளை வாங்கி நச்சுனு தொழிலை ஆரம்பிச்சுட்டான்.

பிசினஸ்மேன் ஆன ஷோக்குல ‘பொழப்பில்லாத பசங் களே கல்யாணத்த முடிச்சு செட்டிலாகிட்டானுங்க... நான் இந்த மாடு கன்னுங்ககூட தனியாளாப் போராட வேண்டியிருக்கு’னு கோளாறா அவங்க அப்பன், ஆத்தாவுக்குக் குத்திக்காட்டியே பொண்ணு தேட வெச்சு, கல்யாணத்தையும் முடிச்சு சம்சாரியாகிட்டான்.

பேச்சுலர்
'உப்புமா.. தப்பும்மா' - இது பேச்சுலர் சமையல்

ஓங்கோல் எருமை மாடுகளை வாங்க தாட்கோவுல லோன் கேட்டு சென்னைக்கு வந்திருந்த வெள்ளியங்கிரி ஒரு வாரம் தங்கி இருந்தது சேக் காளி பழனிக்கண்ணுவோட பேச்சுலர் ரூம்லதான்.

எட்டரை மணி வரைக்கும் இழுத்துப் போர்த்திட்டுத் தூங்குறதும் வாரத்துக்கு ரெண்டு வாட்டி பார்ல, ஏக சைடு டிஷ்ஷுகளோட பீர் அடிக்கிறதும் அடடா... அடடா... அடடானு வாழ்க்கையை அனுபவிக்கவெச்ச பழனிக்கண்ணு, பேச்சுலர் லைஃபோட பேரானந்தங்கள் குறித்து வெள்ளிங்கிரிக்குப் புட்டுப்புட்டுவெச்ச பாயின்ட்ஸ் இப்படி...

துவைச்சு, அயர்ன் பண்ணித்தான் டிரெஸ்ஸை மாட்டிக்கிட்டு போகோணும்னு அவசியம் இல்ல. கலர் மங்குன டி-ஷர்ட்டையும், கோக்குமாக்கா ஒரு த்ரீ ஃபோர்த்தையும் போட்டுக்கிட்டு கையில ஒரு கப் கோக்-கோட ஸ்கைவாக், எக்ஸ்பிரஸ் அவென்யூனு நடைபோட்டா, நீதான்டா யூத்து!

பேச்சுலர்
'ஹேமங் பதானியை தவறுதலாக தாக்கிய ஶ்ரீகாந்த்' - டைம்பாஸ் மீம்ஸ்

பேச்சுலரை நம்பிக் கடன் கொடுக்கத் தயாரா இருக்கிற ஃப்ரெண்ட்ஸுங்க மேரேஜ் ஆனவனை நம்பவே மாட்டாங்க!

தம் வாடையே பிடிக்காத பொண்டாட்டி, ஜீன்ஸைத் துவைக்கப் பிடிக்காத மாமியார், ஆறரை மணிக்கு எந்திரிக்காதவன் மனுஷனே இல்லைனு நினைக்கிற மாமனார்... இப்படி இம்சை பிடிச்சவங்க மத்தியில வாழ வேண்டிய அவசியமே இல்லை!

ஆடிப் பெருக்கு அன்னிக்கு அசைவம் கூடாது, புரட்டாசி மாசம் கறி எடுக்கக் கூடாதுனு கல்யாண வாழ்க்கையில கண்டிஷன்கள் உண்டு. ஆனா, நீ சிங்கிள்னா நெனைச்சா திண்டுக்கல் தலப்பா கட்டி, ஜூனியர் குப்பண்ணா, சேலம் கறி தோசைனு கலந்து கட்டி வெட்டலாம்டா!

கிடைச்ச வேலையில் தொங்கிட்டுக் கெடக்க வேண்டிய அவசியமே இல்லை. மேனேஜர் மூதேவி மூஞ்சைக் காமிச்சான்னா, நாலு எகிறு எகிறிட்டுப் பொழப்பத் தூக்கி எறிஞ்சுட்டு வந்துடலாம்டா. தன்மானம் முக்கியம்டா மச்சான்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com