தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் பற்றி பேசியுள்ளார். அதில், "நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் நம்மை போலவே இருப்பார்களென உறுதியாக சொல்ல முடியாது. அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், "அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரகவாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் விசித்திரமான நிகழ்வுகளை கண்காணிக்க ஒரு பிரிவை உருவாக்கினார்கள். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் பென்டகன் தற்போது ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேற்றுகிரகவாசிகள் தங்கள் உளவாளிகளை பூமிக்கு அனுப்புவதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களை ஆராய்வதற்கு நாசா சிறிய கருவிகளைப் பயன்படுத்துவதைப் போலவே, வேற்றுகிரகவாசிகளின் தங்கள் விண்கலங்கள் மூலம் அடையாளம் காணமுடியாத விண்கலங்கள் பூமிக்கு அனுப்பப்படலாம் என்று பென்டகனின் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பென்டகனின் ஆல்-டொமைன் அனோமலி ரெசல்யூஷன் ஆபீஸின் (AARO) இயக்குனர் சீன் கிர்க்பாட்ரிக் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் தலைவர் ஆபிரகாம் லோப் ஆகியோர் மார்ச் 7 அன்று தங்கள் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.
2022 இல் உருவாக்கப்பட்ட ஏஏஆர்ஓ. வேற்றுகிரகவாசிகளை நாசா தேடுவது போலவே அவர்களும் தேடுகிறார்கள். ஏஏஆர்ஓஜூலை 2022 இல் தொடங்கப்பட்டது. அவை பூமிக்கு அருகாமையில் இருக்கும் அடையாளம் தெரியாத பொருட்களைக் கண்காணித்து வருகின்றன.