'No Smile Please...!' - Photographerகள் படும் பரிதாபங்கள்

நாம் சூப்பராய் போட்டோ எடுத்தாலும் பாராட்டவே மாட்டார்கள், ‘உன் கேமரா செமையா இருக்குடா’ என கேமராவைப் பாராட்டுவார்கள். சச்சின் சதமடிக்க பேட்டா முக்கியக் காரணம்?
Photographer
PhotographerTimepassonline

போட்டோகிராஃபர்கள் தரும் டார்ச்சர்களைத்தான் ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் பார்த்துத் தெரிந்துகொள்கிறோம். ஆனால், ஒவ்வொரு போட்டோகிராஃபரும் படும் டார்ச்சர்கள் உங்களுக்குத் தெரியுமா?

பொது இடங்களில் கையில் கேமராவோடு யாரேனும் திரிந்தால், அவரை ஏதோ ஜேம்ஸ்பாண்ட் அளவிற்கு பில்ட்-அப் செய்து, கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். நிம்மதியாக குனிந்து, நிமிர்ந்து ஒரு போட்டோ எடுக்க முடியாது.

ஏதேனும் முக்கியமான சம்பவத்தை போட்டோ எடுக்க நினைத்து கேமராவைப் பிடித்தால், ஃப்ரேம் முழுவதும் செல்போன்கள்தான் தெரியும். நம்மை மறைத்து செல்போனில் க்ளிக்கித் தள்ளுவார்கள்.

Photographer
'Amazon, Flipkart ஆர்டர் பரிதாபங்கள்' - டைம்பாஸ் மீம்ஸ்

நாம் சூப்பராய் போட்டோ எடுத்தாலும் நம்மைப் பாராட்டவே மாட்டார்கள், பதிலுக்கு ‘உன் கேமரா செமையா இருக்குடா’ என கேமராவைப் பாராட்டுவார்கள். சச்சின் சதமடிக்க அந்த பேட்டா முக்கியக் காரணம்?

நாம் பொறுமையாய் லைட்டிங் பார்த்து எடுத்துக் கொடுத்த போட்டோவை, போட்டோஷாப்பில் கலர் கலராக எடிட் செய்து போட்டுக் கடுப்பேற்றுவார்கள்.

நம் ஊரில் இருப்பவர்கள் எல்லோருக்கும் புரொஃபைல் போட்டோ அவர்கள் கேட்பது போல் எடுத்துக் கொடுப்போம். ஆனால், நாம் நினைப்பது போல நம்மை போட்டோ எடுக்க ஊருக்குள் ஒருத்தன் இருக்க மாட்டான்.

யாரை போட்டோ எடுக்கிறோமோ அவரைத்தான் ஃபோகஸ் செய்து எடுப்போம். ஆனால், போட்டோவைப் பார்த்த பின்பு ‘என்னடா இது நான் மட்டும் தெளிவா தெரியுறேன். பேக் கிரவுண்ட் மங்கலா தெரியுது’ என குதர்க்க கேள்வி கேட்பார்கள்.

நமக்கே என்னைக்கோ ஒருநாள் கல்லீரல் கச்சிதமா வேலை செஞ்சு இப்படி போட்டோ எடுப்போம்னு ஒரு ஐடியா யோசித்து வைத்திருப்போம். ஆனால், சம்பந்தமில்லாமல் உள்ளே நுழைந்து இப்படி எடுக்க வேண்டாம், இப்படி எடுங்க எனக் குட்டையைக் குழப்புவார்கள். ஒழுங்கா போஸ் கொடுக்கிற வேலையைப் பாருங்கய்யா.

தெரியாத்தனமாக யாரையேனும் போட்டோ எடுத்துவிட்டால் போதும். பொழுதுக்கும் போனைப் போட்டு ‘மச்சி சீக்கிரம் அனுப்பி விடுடா, நீ எடுத்த போட்டாவைத்தான் புரொஃபைல் பிக்சரா வைக்கணும்ங்கிற கொள்கையோட இருக்கேன்’ என உருகுவார்கள். அனுப்பி புரொஃபைல் பிக்சராக வைக்கும்போது ஒரு நன்றிகூட சொல்ல மாட்டார்கள். அவ்வ்வ்!

Photographer
'இம்சை டிராவல்ஸ்': வெளியூர் பஸ் பரிதாபங்கள்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com