'இம்சை டிராவல்ஸ்': வெளியூர் பஸ் பரிதாபங்கள்

இந்த ‘நியூலி மேரீட் கப்புள்’னு சொல்லப்படுற புதுமணத் தம்பதிகள். இவர் அவங்களை ‘வாடா’னு கொஞ்சுறதும் பதிலுக்கு அவங்க ‘போடா’னு மிஞ்சுறதும்... அடாடா..
இம்சை டிராவல்ஸ்
இம்சை டிராவல்ஸ்Timepass online

இம்சைகள் பலவிதம். ஆனால், பயணங்களில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இம்சையும் ஒருவிதம்.

நமக்கே நாலு இலை தள்ளி, கொஞ்சம் போலக் கிடைச்ச கேசரி மாதிரிதான் பஸ்ஸுல ஜன்னல் சீட்டோ, ரயில்ல லோயர் பெர்த்தோ கிடைக்கும். அதுக்கும், கழுகுக்கு மூக்குல வேர்த்த கணக்காகவே கிளம்பிவந்து நமக்குக் கண்ணு வேர்க்க வைப்பாய்ங்க. ‘சார்... எனக்கு தலை சுத்தும், கொஞ்சம் ஜன்னல்லேர்ந்து மாறி உட்காந்துக்குறீங்களா..?’ ‘சார்... என் கேர்ள் ஃப்ரெண்டுக்குக் கால்வலி... கொஞ்சம் நீங்க அப்பர் எடுத்துக்குறீங்களா..?’

ஹைய்யா... பக்கத்து சீட் காலினு நாம காலைத் தொங்கப்போட்டு ஆட்டிக்கிட்டு இருக்கும்போதே, கையில் ‘சேத்தன் பகத்’தோட ஆஜராவார் ஓர் இளைஞர். அவர் புத்தகத்தைப் படிக்கும்போது லைட்டா ஒரு பார்வை பார்த்தா போதும், ஆரம்பிச்சுடுவார் மனுசன்.

‘ஐ யம் எ வொரோசியஸ் ரீடர்... நவ் எ டேஸ் யூ நோ’ல ஆரம்பிச்சு வாயில வடை சுட்டு, சட்னியோட பரிமாறுவார். ஆனால், அதுக்கு ‘கடைசியா நான் பார்த்த இங்கிலீஷ் படம் ஷோலே’ன்னு கொடுப்போம் பாருங்க ஒரு ரியாக்‌ஷன். மைண்ட் ப்ளோயிங் ப்ரோ!

நிறைய பஸ்கள்ல, ரெண்டு பேர் உட்கார்ற டபுள் சீட்டர்கள் ரொம்பப் பாவம். ஏன்னா, அதுகளுக்கு இடையில ஒரே ஒரு hand rest தான் இருக்கும். அதுல நீ கையை வைக்கிறதா, இல்ல நான் வெச்சுக்கிறதானு ஒரு பனிப்போரே நடக்கும். யார் எப்போ கையை எடுப்பா... நாம வெச்சுக்கலாம்னு நடக்கிற அந்த அண்ணன், திண்ணைக் கதை அட்டகாசம்பா!

சில நேரங்களில், நம்மகூட ‘சூரியவம்சம்’, ‘சமுத்திரம்’ படத்துல வர்ற கூட்டுக்குடும்பங்கள் பயணிக்கும். அன்னிக்குனு பார்த்து நாம தனியா வந்திருப்போம். அவிய்ங்களுக்குள்ள அவிய்ங்களே பொழிஞ்சுக்கிற பாச மழை நம்ம மேல தெறிச்சு, ஜல்ப்பு பாஸ் ஜல்ப்பு!

இம்சை டிராவல்ஸ்
'நீ கிளாப் அடிக்க நேரம் வந்திருச்சு. புரொடியூசர் ரெடி' - உதவி இயக்குனர்களின் பரிதாபங்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே, ஊருக்குள்ள எலிஜிபிள் பேச்சுலரா சுத்திக்கிட்டுருக்கும் நமக்கு, எல்லாப் பயணங்கள்லேயும் மானாவாரியா வெறியேத்த அலையிற குரூப் ஒண்ணு இருக்காய்ங்க பாஸூ.

அவிய்ங்கதான் இந்த ‘நியூலி மேரீட் கப்புள்’னு சொல்லப்படுற புதுமணத் தம்பதிகள். இவர் அவங்களை ‘வாடா’னு கொஞ்சுறதும் பதிலுக்கு அவங்க ‘போடா’னு மிஞ்சுறதும்... அடாடா, அது ஒரு மாயக்கண்ணாடி ரீமேக் பாஸ்!

அட... பஸ், ரயிலைவிட ஏரோப்ளேன் இம்சை ஒண்ணு இருக்கு. கூடவர்ற எல்லாப் பயலுகளும் இங்கேயே பிறந்து அங்கேயே பிறந்த மேனியா திரிஞ்சிருந்தாலும்கூட பக்கத்து சீட்டுக்காரய்ங்ககிட்ட தமிழ்ல பேச மாட்டாய்ங்க.

இம்சை டிராவல்ஸ்
'சொல்லுங்க ரமேஷ்... அங்க புயல் எப்டி இருக்கு?' - நியூஸ் ரீடர் பரிதாபங்கள்

எங்கிட்டுத் திரும்பினாலும் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ மயமாத்தான் இருக்கும். அவிய்ங்க பேசுற ஆங்கிலமும் புரியாம, நாமளும் என்ன பேசி ஆரம்பிக்கிறதுனும் தெரியாம கண்ணு ரெண்டையும் உருட்டி வெச்சுக்கிட்டு ‘நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு’னு வந்து இறங்குவோம். அதெல்லாம் வன்கொடுமை ப்ரோ!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com