பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோக்கு, ஆறு மனைவிகள் இருக்காங்க. அவங்க எல்லாரும் சேர்ந்து தூங்கணும்னு 20-7ன்ற அளவுல ஒரு படுக்கைய ரெடி பண்ணியிருக்காரு. இந்த படுக்கையோட விலை கிட்டத்தட்ட 81 லட்சம் ரூபாய்.
ஆர்தருக்கு மொத்தம் ஒன்பது மனைவிகள். பிரேசில் சட்டத்துல பலதர மணத்துக்கு இடமில்லன்றதால, கத்தோலிக்க முறையில இவங்க எல்லாரையும் திருமணம் செஞ்சுக்கிட்டாரு ஆர்தர். போன வருஷம் தான் ஒன்பதுல நாலு பேர விவாகரத்து செஞ்சாரு. சமீபத்துல 51 வயதான ஒலிண்டா மரியாவ திருமணம் செஞ்சாரு.
அவருக்கு இப்போ லுவானா கசாகி (27), எமெல்லி சோசா (21), வால்குரியா சாண்டோஸ் (24), ஒலிண்டா மரியா (51), டாமியானா (23), மற்றும் அமண்டா அல்புகெர்கி (28)னு 6 மனைவிகள். ஆர்தர் அவரோட ஆறு மனைவிகள் கூடவும் சேர்ந்து தூங்குறதுக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறார்.
படுக்கையை சேர்த்துபோட்டு படுகிறது, இரண்டு சோபாவை சேர்த்துபோட்டு படுகிறது, இல்ல தரையிலே படுத்துகிறதுனு நிறைய முயற்சிகள் எடுத்திருக்காரு. ஆனா எதுவுமே அவங்களுக்கு சரிப்பட்டு வரல.
அதனாலதான் ஆறு மனைவிகள் கூட சேர்ந்து தூங்குற மாதிரி 20-7ன்ற அளவுல ஒரு ராட்சத படுக்கைய உருவாக்கியிருக்கார். இத பத்தி ஆர்தர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துலயும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கார்.
"உலக வரலாறுல யாருமே பண்ணாத ஒரு விஷயத்தை நான் பண்ணி இருக்கேன்! இதுக்காக எனக்கு கின்னஸ் புக்ல இடம் கிடைக்குமா"னு கேப்ஷன் போட்டு இருக்கார்.
இந்த ராட்சத படுக்கைய உருவாக்க 15 மாதங்கள், 12 பேர் கொண்ட குழு மற்றும் 950 திருகுகள்(screw) தேவைப்பட்டதாகவும் சொன்னார். இந்தப் படுக்கைக்காக கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள் (இந்திய ரூபாய் மதிப்புள்ள 81.54 லட்சம்) செலவு பண்ணதாகவும் ஆர்தர் சொன்னாரு.
அது மட்டும் இல்லாம ஆறு மனைவிகள் கூடவும் குழந்தை பெறனும், அப்பதான் ஆறு பேர்ல யாருமே கவலைப்பட மாட்டாங்கனும் சொல்லியிருக்காரு.