இந்தப் பொண்ணு 'சிரிச்சா போச்சு' - பிரிட்டனில் வினோதம்

எப்பெல்லாம் சிரிக்கிறாங்களோ அப்போவே அந்த இடத்துலயே ஒரு செகண்ட்ல தூங்கிடுவாங்க. இவங்களுக்கு நார்கோலெப்ஸி, கேட்டாப்லெக்ஸினு ரெண்டு விதமான பிரச்சனை இருக்குது.
ஜெஸ்ஸிகா
ஜெஸ்ஸிகாடைம்பாஸ்
Published on

பிரிட்டன்ல நோட்டிங்கம் நகரத்துல ஜெஸ்ஸிகா ஜெஸ்ஸிகானு ஒரு அக்கா இருக்காங்க. இவங்களுக்கு ஒரு வித்யாசமான பிரச்சனை இருக்கு. அது என்னன்னா சிரிச்சா இவங்க தூங்கிடுவாங்க. கேட்கவே புதுசா இருக்குல்ல.

இவங்க எப்பெல்லாம் சிரிக்கிறாங்களோ அப்போவே அந்த இடத்துலயே ஒரு செகண்ட்ல தூங்கிடுவாங்க. இதுக்கு என்ன காரணம்னு விசாரிக்கும் போது நார்கோலெப்ஸி, கேட்டாப்லெக்ஸினு ரெண்டுவிதமான பிரச்சனை இவங்களுக்கு இருக்குறத கண்டுபிடிச்சிருக்காங்க.

ஜெஸ்ஸிகா
'இது ஒரு கொடிய நோய்' - புதுப்புது நோய்களை வைத்து ஒரு சினிமா

இந்த பிரச்சனை உள்ளவங்க திடீர்னு தூங்கினாலும் இவங்க மூளை எப்போதும் போல ஆக்டிவாதான் இருக்குமாம். அவங்கள சுத்தி என்ன நடக்குதுன்னு அவங்களுக்கும் நல்லாவே தெரியுமாம்

16 வயசுல இருந்து இந்தப் பிரச்சனை இருக்கிறதா ஜெஸ்ஸிகா சொல்லிருக்காங்க. ஒருமுறை சொந்தக்காரங்க வீட்டுக்கு இவங்க போனப்போ அங்கே ஒருத்தர் பயங்கரமான மொக்க ஜோக் சொல்லிருக்கார்.

அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சவங்க அன்னைல இருந்து இப்படி தூங்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ இதுவே பழகிட்டதால எப்பெல்லாம் சிரிக்க வேண்டிய சூழ்நிலை வருதோ அப்பெல்லாம் குடுகுடுன்னு ஓடிப்போய் பெட்ல படுத்து சிரிச்சிட்டு அப்படியே மல்லாந்து தூங்கிடுறாங்களாம்.

கண்ட கண்ட இடத்துல தூங்க அவங்களுக்கே ஒரு மாதிரியா இருக்குதாம். அதான் இந்த ஏற்பாடாம். 'நான் சிகப்பு மனிதன் 2' எடுக்க விஷாலுக்கு ஒரு சூப்பர் கதை ரெடி.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com