கின்னஸ் உலக சாதனைகளின்படி சவுதி அரேபியாவில் புதிதாகக் கட்டப்படும் 'ஜெட்டா டவர்' கட்டிடம், புர்ஜ் கலிஃபாவைவிட உயரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புர்ஜ் கலிஃபாவின் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற புகழை இந்தக் கட்டிடம் தட்டிச் செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. என்ற கட்டிடம்
14 வருடங்களுக்கு முன்பு துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற புகழ் பெற்றது. புர்ஜின் கட்டுமானப் பணிகள் 2004 இல் தொடங்கி 2010 இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. எண்ணெய்யை மட்டுமே நம்பியிருந்த அந்த நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி வணிகம், சுற்றுலா மற்றும் ஆடம்பரத்தை மையமாகக் கொண்ட புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் திட்டத்தின் பெரும் பகுதியாக இருந்தது.
துபாயின் மையத்தில் அமைந்துள்ள புர்ஜ் பெரிய பன்முக வளர்ச்சியின் முக்கிய அம்சமாக இருக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம் இதைவிட உயரமாக அமையும் என்று கூறப்படுகிறது.
கிங்டம் டவர் என்று அழைக்கப்படும் ஜெட்டா டவர், 1,000 மீ (1 கிமீ; 3,281 அடி) உயரத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜெட்டா எகனாமிக் கம்பெனி கட்டிடம் சொகுசு வீடுகள், அலுவலக இடம், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் சொகுசு குடியிருப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மேலும், இங்கு உலகின் மிக உயர்ந்த வானாராய்ச்சி நிலையம் அமையும் என்று ஜி.டபுள்யூ.ஆர் கட்டிட நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானிலுள்ள அட்டகாமா பல்கலைக்கழகத்தில் 5,640 மீட்டர் (18,503 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிலையம் தான் மிக உயரமானதாக இருக்கிறது.
"1.23 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஜெட்டா டவர்ஸ் புர்ஜ் கலிஃபாவின் பெருமையை தனதாக்கி கொள்ளலாம். ஐந்து வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட பணிகள் 2023 இல் மீண்டும் துவங்கியுள்ளது. இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவு பெறும். ஜெட்டா ட்வர்ஸில் இடம்பெறவுள்ள வசதிகள் பிரம்மிக்க வைக்கும்" என்று கட்டிட நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ரிதன்யா சாருமதி.