இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) மெட்ராஸ் பாதுகாப்பு வசதிகளை கொண்ட BharOS என்ற மொபைல் OS-ஐ வெளியிட்டுள்ளது. இந்த OS ஆனது IIT மெட்ராஸின் 8வது பிரிவு நிறுவனமான JandK ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (JandKops) ஆல் உருவாக்கப்பட்டது. தனிமனித தகவல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அம்சங்களை வழங்கும் வகையில் இந்த BharOS உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பயனர்களுக்கு தேவையான, பாதுகாப்பான செயலிகளை மட்டுமே BharOS ஃபோனில் அனுமதிக்கிறது. விரைவில், PASS எனப்படும் தனியார் ஆப் ஸ்டோரில் இந்த BarOS-ஐ டவுன்லோட் செய்யலாம்.
குறிப்பிட்ட பாதுகாப்புத் சேவைகள் மற்றும் முக்கியமான தகவல்களுடன் வணிக நிறுவனங்களுக்கு முதற்கட்டமாக இந்த OS வழங்கப்படவுள்ளது. BharOS எந்த ஆண்ட்ராய்டு கோரின் பதிப்பை அடிப்படையாகக் கொண்டது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மெட்ராஸ் ஐஐடியின் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி BharOS பற்றி பேசுகையில், "BharOS பயனர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த புதுமையான OS தங்களுடைய மொபைல் சாதனங்களில் உள்ள தகவல்கள் திருடப்படுமோ என்ற பயத்தையும் ஏற்படுத்தாது" என்று கூறியுள்ளார்.