சீனாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, மலை போல் பணத்தைத் குவித்து தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கியுள்ளது.
உலகளவில் உள்ள பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கமும், ஊதியத்தையும் குறைத்துள்ளது.
இந்த சூழிலில் சீனாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தன் நிறுவன ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் கொடுத்ததோடு, பிரம்மிப்பூட்டும் விதமாக சம்பள உயர்வையும் அளித்துள்ளது.
சீனாவின் ஹெனான் மாகணத்தில் இயங்கி வரும் ஹெனன் மைன் என்ற நிறுவனம், கிரேன் போன்ற பல கனரக வாகனங்களை தயாரித்து இந்தியா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவில் பொருளாதாரம் சரிந்திருந்தாலும், ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த நிறுவனத்தின் வருவாய் இந்திய மதிப்பில் ரூ. 11,086 கோடி. இதனால் லாபமடைந்த நிறுவனம் ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இந்த சிறப்பு போனஸை அளித்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ரூ. 73 கோடி 81 லட்சம் மதிப்புள்ள பண கட்டுகள் மலை போல் குவித்து நிறுவனத்தின் உயர்வுக்காக சிறப்பாக பணியாற்றிய 3 விற்பனை மேலாளர்களுக்கு ரூ. 6 கோடியும் மற்ற ஊழியர்களுக்கு தலா ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டது.
கோடியில் வாங்கிய போனஸ் போதாதவர்களுக்கு பணம் எண்ணும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 18 லட்சம் வரை பரிசு வழங்கப்பட்டது.