Ravindra Jadeja : தயாரிப்பாளராக களமிறங்கும் ஜடேஜா - நடிகர்கள் யார்?

ஜெயந்த் கில்டார் இயக்கும் இந்தப் படத்துக்கு 'பச்சாதர் கா ஜோரா’ (Pachhattar Ka Chhora) என்று பெயரிடப்பட்டுள்ளது.
Jadeja
Jadejatimepass
Published on

கிரிக்கெட் வீரர் தோனி கிரிக்கெட் மட்டுமின்றி உணவகம், உடற்பயிற்சிக்கூடம், இயற்கை விவசாயம், சென்னையின் எஃப் சி கால்பந்து அணியின் உரிமையாளர் எனப் பல்வேறு துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவருகிறார்.

அண்மையில், தோனி தமிழ் திரைத்துறையிலும் தயாரிப்பாளராகக் கால்பதித்தார். ‘எல்.ஜி.எம்’ (LGM - Let's Get Married) என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா உட்படப் பலர் நடிக்கின்றனர்.

தோனியைத் தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவும் திரைத்துறையில் களமிறங்கியுள்ளார். ஜெயந்த் கில்டார் இயக்கும் இந்தப் படத்துக்கு 'பச்சாதர் கா ஜோரா’ (Pachhattar Ka Chhora) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரன்தீப் ஹூடா, நீனா குப்தா, சஞ்சய் மிஸ்ரா, குல்சன் குரோவர் போன்ற முன்னணி நடிகர்கள் உட்படப் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஜடேஜா படத் தயாரிப்பில் களமிறங்கியதற்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Jadeja
WIPL 2023 : RCB கேப்டன் Smriti Mandhana இன் சாதனை - ஒரு லிஸ்ட் !
Timepass Online
timepassonline.vikatan.com