டெல்லி : Delhi Metro Train இல் மது பாட்டில்கள் எடுத்து செல்லலாம் - மதுபிரியர்கள் மகிழ்ச்சி !

திருத்தப்பட்ட விதிமுறையின் படி இனி டெல்லியின் அனைத்து மெட்ரோ ரெயில்களிலும் ஒரு நபர் 2 மது பாட்டில்களை எடுத்து செல்லலாம்.
Delhi Metro
Delhi Metrotimepass

டெல்லி நகரில் உள்ள மெட்ரோ ரெயில்களில் மது பாட்டில்களை எடுத்து செல்லலாம் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேநேரம், "ஒரு நபர் 2 மது பாட்டில்களை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிப்படுவார்கள். மெட்ரோ வளாகத்தில் மது அருந்துவதற்கான தடை தொடரும்" என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், "விமான நிலைய வழித்தடம் தவிர டெல்லி மெட்ரோ ரெயில்களில் மது பாட்டில்களை கொண்டு செல்வதற்கு இதுவரை தடை இருந்தது. மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவின் மதிப்பாய்வுக்கு பிறகு விதிமுறை திருத்தப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளனர்.

"திருத்தப்பட்ட விதிமுறையின் படி இனி டெல்லியின் அனைத்து மெட்ரோ ரெயில்களிலும் ஒரு நபர் 2 மது பாட்டில்களை எடுத்து செல்லலாம். அதே சமயம் பயணிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எந்தவொரு பயணியும் குடிபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்டவிதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளனர்.

Delhi Metro
Maaveeran : Vandalur Zoo சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் Sivakarthikeyan !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com