உலகில் பெரும்பாலும் மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்றாலே அதற்கு தனி மதிப்பி உண்டு. அதேபோல் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்திருந்த சிவப்புநிற "பிளாக் ஷீப்" கம்பளி ஸ்வெட்டர் சுமார் $1.1 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ 9 கோடிக்கும் மேல்) ஏலத்தில் விற்கப்பட்டதாக Sotheby's ஏல நிறுவனம் தெரிவித்தது.
இளவரசி டயானா, அழகிற்கு மட்டுமல்ல, அணியும் ஆடைகளாலும் மக்களினால் அதிகம் ரசிக்கப்பட்டார். அப்போதைய இளவரசர் சார்ல்ஸுடன் திருமணம் நிச்சயமான பிறகு இளவரசி டயானா இந்தச் ஸ்வெட்டரை அணிந்தார். முதல் முறையாக 1981இல் polo விளையாட்டுப் போட்டியின்போது அவர் அதனை அணிந்துசென்றார்.
சிவப்பு நிற ஆடையில் வெள்ளைச் செம்மறியாடுகள் வரிசையாக நிற்பதைக் காணலாம். அதில் ஒரு செம்மறியாடு மட்டும் கறுப்பு நிறத்தில் இருக்கும். இந்தச் சட்டை $50,000 முதல் $80,000 டாலர் வரை விற்கப்படலாம் என்று அந்த ஏல நிறுவனம் நினைத்திருந்தது. ஆனால் அங்கு நடந்த கதையே வேறு. அது அவர்கள் நினைத்ததை விட 10 மடங்குக்கும் மேல் விலை போயிருக்கிறது.
ஏலத்தின் போது $190,000 டாலர் விலைக்குக் கேட்கப்பட்ட இந்தச் சட்டையானது, கடைசி 15 நிமிடங்களில் இணைய ஏலதாரர்களின் கடுமையான போட்டிக்குப் பிறகு, இந்த ஆடை $1.1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. இதுவரை ஏலம் போன இளவரசி டயானாவின் ஆடைகளில் இந்த ஆடை அதிக விலை பெற்று சாதனை படைத்துள்ளது.
மேலும், இதற்கு முன்னர் கடந்த ஜனவரியில் இளவரசி டயானாவின் gown ஆடை ஒன்று 604,000 டாலருக்கு ஏலம் போனது குறிப்பிட்டதக்கது.
- மு.குபேரன்.
வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.
Follow us : https://bit.ly/3Plrlvr