'பிட் அடிப்பதில் கின்னஸ் ரெகார்ட்டே தரலாம்' - இது ஸ்பெயின் மாணவரின் சாதனை

பதினொரு பேனாவிலும் பக்குவமாக பிட் எழுதிய நேரத்தில் படித்திருந்தால் பாஸாகி இருக்கலாமே! ஐடியா இல்லாத பசங்க பா, என்கிறார்கள் அட்வைஸ் அங்குசாமிகள்.
ஸ்பெயின்
ஸ்பெயின் டைம்பாஸ்

“பிட் அடிக்கறது-ல நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்-னு நிருபிச்சிட்டலே!”

பிட் அடிப்பதில் கின்னஸ் சாதனை புரிந்த பிதாமகனே வாழ்க! வாழ்க! என்று புகழாரம் சூட்டத் தொடங்கிவிட்டனர் இணைய வாசிகள்.

பிட்டு-னா பேப்பர்ல எழுதி சட்டை பாக்கெட்ல வெப்பாங்க..பேண்ட் பாக்கெட்ல வெப்பாங்க.டேபிள் ல எழுதி வெப்பாங்க. ஆனா, இது புதுசா இருக்குனே.! புதுசா இருக்கு என்று சொல்லும் அளவிற்கு எக்ஸாம் எழுத வைத்திருந்த பதினோரு பேனாவிலும் பிட் எழுதி மாட்டிக் கொண்டவர் தான் ஸ்பெயின் நாட்டு சட்டக்கல்லூரி மாணவர்.

இவர் பார்ப்பதற்கே அப்பாவி போன்றும் டாப்பர் போன்றும் கடகடவென தேர்வு எழுதியிருக்கிறார்.. அடடே.! பதினோரு பேனா வைத்து தேர்வு எழுத வந்திருக்கிறானே!. நன்றாகப் படிக்கும் மாணவன் போல் தெரிகிறதே என வியந்த ஆசிரியருக்கு காத்துக்கொண்டிருந்தது பேரதிர்ச்சி.

ஸ்பெயின்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'நெஞ்சம் மறப்பதில்லை பிரிந்த காதலின் தீராவலி'

பேனாவை எடுத்துப் கூர்ந்து கவனித்த போது , 11 ரீபிள் பேனாவிலும் கனகச்சிதமாக ஒரு யூனிட் முழுவதும் பிட் எழுதி வைத்துள்ளது தெரியவந்தது..சிற்பி போல அச்சுபிசங்காமல் பேனாவில் எழுத்துகளை செதுக்கியுள்ளார்.

நேக்காக சிக்கிய மாணவர்,இப்ப நான் என்ன பண்றது எனத் திறுதிறுவென முழித்துள்ளார். வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி என ஆசிரியர் வெளுத்து வாங்கியுள்ளார்.

தனது வாலிப வயதில் இருந்தே பற்பல பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை இதற்காகவென்றே வலிமைப்படுத்திக் கொண்டிருந்தார் போல என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

பதினொரு பேனாவிலும் பக்குவமாக பிட் எழுதிய நேரத்தில் படித்திருந்தால் பாஸாகி இருக்கலாமே! ஐடியா இல்லாத பசங்க பா, என்கிறார்கள் அட்வைஸ் அங்குசாமிகள்.

- ர.பிரேம் குமார்

ஸ்பெயின்
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'தாய்மையைப் போற்றும் தாடிக்காரன்' யஷ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com