Facebook ப்ளூ லைக் பட்டன் அட்ராசிட்டீஸ்

வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற போஸ்ட்ல கூட ப்ளூ லைக் பட்டனை அழுத்தி அவ்வளவு விறைப்பா காட்டிக்கிற ஆளுங்க மனநிலையைத்தான் என்னால புரிஞ்சிக்க முடியல.
ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்டைம்பாஸ்
Published on

பேஸ்புக்ல ஒருத்தர் சீரியஸா ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் ஒருத்தர் சிரிச்சு வைக்க, அந்த போஸ்ட் போட்டவர் "ஏன் சிரிக்கிறீங்க?" னு கேட்க, அந்த நண்பர் இல்லைங்க உங்க பதிவில் ஒரு இடத்தில நீங்க யூஸ் பண்ணின வார்த்தை எனக்கு சிரிப்பா இருந்துச்சு அதான் ஸ்மைலி விட்டேன். மத்தபடி உங்கள கலாய்க்க சிரிக்கலனு அவர் விளக்கம் கொடுத்தார்.

அதே மாதிரி ஒரு கவலையோட ஒருத்தர் உருக்கமா ஒரு போஸ்ட் போட அதில் பல பேரு ஆர்ட்டின் விட்டிருந்தாங்க  அந்தப் பதிவோட  கமெண்ட்ல போஸ்ட் போட்டவரே வந்து இது எவ்வளவு உருக்கமான செய்தி  ஒரு care சிம்பல் போடணும்ன்னு யாருக்குமே  தோனலையானு கேட்டு வெச்சிருந்தாரு.

இந்த மாதிரி போஸ்ட் போடுபவர்களின் மனநிலை என்னனு எழுத்தில் எழுதும் போதும் அந்த உணர்வுகளை புரிந்து கொள்ளவது கடினம் என்பதாலோ என்னவோ எல்லா போஸ்டுக்கும் பலர் ப்ளூ லைக் பட்டனை அழுத்திட்டு போயிடுறாங்க.

இப்படி ப்ளூ லைக் போடுவது என்பது பெரும் நேரம் பொத்தாம் பொதுவான உணர்வுகளை கடத்துவது மாதிரியும் இருக்கும்.

ஃபேஸ்புக்
'எல்லாம் நடிப்பா?' : ஃபேஸ்புக் ஃபேக் ஐடிகளைக் கண்டுபிடிப்பது எப்படி? பார்ட் - 2

ஆனா, வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற மாதிரி போஸ்டுக்கு கூட ப்ளூ லைக் பட்டனை அழுத்தி அவ்வளவு விறைப்பா காட்டிக்கிற ஆளுங்க மனநிலையைத்தான் என்னால இன்னைக்கு வரைக்கும் புரிஞ்சிக்க முடியல.

லைக் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. ப்ளூ லைக் கூட போடாத பல நண்பர்கள் என்னை நேரில் சந்திக்கும் போது என்னப்பா பேஸ்புக்ல பயங்கரமா எழுதுறன்னு கேட்டதுண்டு. பல நண்பர்களின் 5000 நண்பர்கள் கிட்ட இருக்க முகநூல் Wallல் 100க்கும் குறைவான லைக்குகளே விழும்.

ஆனா லைக் மட்டுமே அந்த போஸ்ட்டோட ரீச்சை தீர்மானிப்பதில்லை அதையும் தாண்டி பலரின் கவனிப்புகளை பெற்றே தான் பல போஸ்ட்கள் இருக்கிறது.

நானும் பல நேரம் பல போஸ்ட்களை படித்து கடந்து போவேன். சிலவற்றிற்கு என்னோட உணர்வுகளை ஆர்ட்டின், கேர், சிரிப்பு, Sad பட்டன்கள் மூலம் கடத்துவேன். எப்படி ரியாக்ட் பண்ணனும்ன்னு தெரியாத போஸ்ட்களுக்கு வெறும் லைக் போட்டு கூட கடந்திருக்கிறேன்.

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா ப்ளூ லைக் பொத்தானை மட்டும் தட்டிட்டு போற நண்பர்களை காமெடி போஸ்ட் எழுதுற நண்பர்கள் ஜடம் ரேஞ்சுக்கு பகடி செய்வதுண்டு. ப்ளூ லைக் பொத்தானை அலுத்துற ஆளுங்க மனநிலையில் காமெடி போஸ்ட்னு நினைச்சு எழுதுற ஆளுங்களை எவ்வளவு மட்டமா நினைச்சிருப்பாய்ங்கனு புரிஞ்சிக்கிறதுக்காத்தான்.

- Isma Breezy

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் எழுத்தாளர் ஆவது எப்படி?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com