'கௌரவ டாக்டர் பட்டம் வேணுமா?' - உப்புமா விருது கம்பெனிகளின் பிசினஸ் ட்ரிக்ஸ்

ரோமன் லெட்டரில் பிரின்ட் செய்யப்பட்டு கோல்டு கோட்டிங் இடப்பட்ட 500 ரூபாய்க்குக்கூட தேராத அந்த டாக்டர் பட்டத்தை வாங்க அவர் செலவழித்தது 10 லட்சம்!
உப்புமா விருது
உப்புமா விருதுடைம்பாஸ்
Published on

தமிழ்நாட்டில் விருதுகளுக்கா பஞ்சம்? அதிலும் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் விதவிதமான விருதுகளைப் பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் வி.ஐ.பி-கள் ரொம்ப ஜாஸ்தி.

எப்படி, யாரால், எதற்கு, எப்போது தரப்படுகின்றன இந்த விருதுகள்? சும்மா இருக்கும் கைப்பிள்ளைகளை உசுப்பேற்றி விதவிதமான பெயர்களில் உப்புமா விருதுகளைத் தலையில் கட்டிவிட்டு, நன்கொடையாக சிலபல லட்சங்களைக் கறந்துவிடுவதை ஒரு பிசினஸாகவே செய்கின்றனர்.

உப்புமா விருது
'இளையராஜா விருது பெறும் நோபல் பரிசு' - டைம்பாஸ் கார்டூன்ஸ்

புகழுக்கு அலையும் புலிகேசிகள்தான் இவர்களின் டார்கெட். சென்னையில் மாத வாடகைக்கு ஒரு டஞ்சன் ரூம் போட்டுக்கொள்வார்கள். அதுதான் ஆபீஸ். பெயருக்கு ஒரு பத்திரிகையோ, கலை மன்றம், ஃபைன் ஆர்ட்ஸ் என ஏதாவது ஒன்று வைத்திருப்பார்கள்.

அவசியம் அதற்கொரு லெட்டர் பேடு இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊழல் வி.ஐ.பி-கள், கந்துவட்டிப் பார்ட்டிகள், நில மோசடிப் பேர்வழிகள், டுபாக்கூர் பஞ்சாயத்துத் தலைவர்கள் போன்றவர்களின் விவரங்கள், போலீஸிடம் இருக்கிறதோ இல்லையோ, இவர்களிடம் இருக்கும். இனி வேட்டை ஆரம்பம்...

விருது வாங்கும் நபர் மதுரை என்று வைத்துக்கொள்வோம். சென்னை டு மதுரை அன்ரிசர்வ்டில் வந்து, அங்கே வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு, பொருந்தாத சஃபாரியைச் சரிசெய்தபடியே தலைவரின் வீட்டில் இறங்குவார்கள்.

‘எங்கள் கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டிலேயே நீங்கதான் சிறந்த பஞ்சாயத்துத் தலைவர். மெட்ராஸ்ல விருது தர்றோம்’ என்று ஏத்திவிட்டு, வரும்போது கெட்டிச் சட்டினியும், ரெண்டு இட்லியும், கார் வாடகையும் வாங்கிக்கொண்டு கிளம்புவார்கள்.

உப்புமா விருது
'டாக்டர். லெஜண்ட், லொள்ளு சபா ஜீவா, அஜித் ரசிகர்கள்' - டைம்பாஸ் மீம்ஸ்

‘‘அப்படித்தாண்ணே ஒருக்கா எனக்கும் போன் போட்டாய்ங்க. ‘பரிசு வாங்குற அளவுக்கு நாம ஒண்ணும் சாதிக்கலையே?’னு உள்ளுக்குள்ள ஒரு இதுவா இருந்துச்சு.

‘உங்க சாதனை உங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத்தான் தெரியும், நேர்ல வாங்க’ன்னாய்ங்க. போனேன். திருச்சியில், பெரிய ஹால்ல நல்ல கூட்டம். உள்ளே நுழையும்போதே ‘நன்கொடை’னு ஒரு அமௌன்ட்டை வாங்கிட்டுத்தான் விட்டாய்ங்க. அப்புறம் பார்த்தா, வந்திருந்த அத்தனை பேரும் விருது வாங்கத்தான் வந்திருக்காய்ங்க.

பார்வையாளர்னு யாரும் கிடையாது. வெளியே சொன்னா வெட்கக்கேடுனு வெயிட் பண்ணி அந்த ‘விருதை’ வாங்கிட்டு வந்து சேர்ந்தேன்’’ என்று சிரிக்கிறார் ராமேஸ்வரம், பாம்பன் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஹனிஃபா.

கல்லல் ஊரைச் சேர்ந்த மாயன் பரிமளம், துபாயில் வேலை பார்க்கிறார். ஊருக்கு வந்தால் சுத்துப்பட்டு ஊரே அதகளமாகும். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார். ஒருமுறை திருமாவளவனை அழைத்து வந்து விழாவெல்லாம் எடுத்தார்.

உப்புமா விருது
நடிகர் விமலுக்கு 'டாக்டர் பட்டம்' - எத்தனை விமலியன்களுக்கு தெரியும்?

இவரை ஒரு கும்பல் அணுகி, ‘அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்திருக்கிறது’ என்றதும் பரிமளம் குதூகலமாகிவிட்டார்.

ரோமன் லெட்டரில் பிரின்ட் செய்யப்பட்டு கோல்டு கோட்டிங் இடப்பட்ட 500 ரூபாய்க்குக்கூட தேராத அந்த டாக்டர் பட்டத்தை வாங்க அவர் செலவழித்தது 10 லட்சம்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com