கிறிஸ்டியானோ ரொனால்டோவை காண நூற்றுக்கணக்கில் திரண்ட ரசிகர்கள். மலையின் மீது ஏறி அவரை பார்க்கச் சென்ற ரசிகர்கள் பட்டாளம்.
கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது நம் அனைவருக்கும் அறிந்த விஷயமே. அவர் எங்குச் சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்துவிடும். அந்த வகையில் ரொனால்டோ ஆசியா சாம்பியன்ஸ் லீக் போட்டிக்காக ஈரான் கிளப் ஆன பெர்சிபோலிசூடான் அல் அணியை எதிர்கொள்ள தன்னுடைய அணியான அல்-நஸ்ருடன் ஈரானில் உள்ள தெஹ்ரான் நகருக்கு வருகைதந்திருக்கிறார்.
ரொனால்டோ தங்கள் ஊருக்கு வருகிறார் என்ற செய்தியை அறிந்த அவரின் ரசிகர்கள் விமான நிலையத்தில் அவருக்கு ஆரவார வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்துடன் ரசிகர்கள் அன்பு நின்றுவிடாமல், ரொனால்டோ பேருந்தில் தன்னுடைய அணியுடன் விடுதிக்குச் செல்லும் வரை ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். என்ன செய்தாலும் சரி என் தலைவன் முகத்தை ஒரு முறையாவது பார்த்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் விடுதி இருந்த மலையில் ஆபத்தான வழியில் ஏறிச் சென்று பார்த்தனர் ரசிகர்கள்.
இந்த காட்சியானது ஒரு போராட்டக்களம் போன்றே காட்சியளித்தாலும் ரொனால்டோ அவரின் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டக்களம்.
அதேபோல் ரொனால்டோவின் மிகப் பெரிய ரசிகரான ஓவியர் பாத்திமா தன்னுடைய உடல் முழுமையாக செயல் இழந்து போனாலும் தன்னுடைய கால்களை வைத்து ஓவியம் செய்யும் திறன் அவருக்கு இருந்தது. 2020யில் அவர் வரைந்த ஓவியமான ரொனால்டோவின் உருவப்படம் அந்த நேரத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
ரொனால்டோ ஈரானுக்கு வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில் பாத்திமா தான் வரைந்த உருவப்படத்துடன் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்தித்தார். ஆயிரம் சொல் ரொனால்டோவை பற்றிச் சொன்னாலும் "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்" என்ற ஒரு வரி போது.
- பா.முஹம்மது முஃபீத்.
வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.
Follow us : https://bit.ly/3Plrlvr