நாமக்கல்
நாமக்கல்டைம்பாஸ்

நாமக்கல் : மின்சார கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் !

சாலையின் ஓரம் உள்ள மின்கம்பத்தில் அவரை பிடித்து கட்டி வைத்து கேக் வெட்டி கொண்டாடியதோடு அவரை முகத்தில் கேக் பூசியும், மாட்டு சானத்தை கரைத்து ஊற்றியும் வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நண்பரின் 27-வது பிறந்தநாளை மின்சார துறையில் வேலை செய்யும் சக நண்பர்கள் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து கேக் வெட்டி வித்தியாசமான முறையில் பிறந்தாள் கொண்டாட்டாடியுள்ளனர். இது அப்பகுதி மக்களின் கவனத்தையும் கவர்ந்தது.

ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மின்சாரத் துறையில் வேலை செய்யும் சில நண்பர்கள் தங்களது நண்பர் கார்த்தியின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்து அவரை சிங்களாந்தபுரம் புறவழி சாலைக்கு அழைத்து வந்தனர்.

பின் அங்கு சாலையின் ஓரம் உள்ள மின்கம்பத்தில் அவரை பிடித்து கட்டி வைத்து கேக் வெட்டி கொண்டாடியதோடு அவரை முகத்தில் கேக் பூசியும், மாட்டு சானத்தை கரைத்து ஊற்றியும் வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தப் பகுதியைக் கடந்த பலர் நண்பர்களின் இந்த வித்தியாசமான பிறந்த நாள் கொண்டாட்டத்தை நின்று ரசித்து சென்றனர். சிலர் இந்த ஆபத்தான செயலைப் பார்த்து கண்டிக்கவும் செய்தனர்.

- துரை வேம்பையன்.

நாமக்கல்
Tamil Cinema : 'வேட்டி, காசு பணம், ரோபோ, தோசை மாவு, நாய்' - இதுக்கெல்லாமா பாட்டு போடுவீங்க லிஸ்ட்!
Timepass Online
timepassonline.vikatan.com