'யாரு சாமி நீ? எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'- இணையத்தைக் கலக்கும் சூப் பாய்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் ஒரே வருடத்தில் 144 கிலோவிலிருந்த உடல் எடையை 70 கிலோவாக குறைத்து அசத்தி உள்ளார்.
சூப் பாய்
சூப் பாய்டைம்பாஸ்

காதலியால் நிராகரிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கண்ணீரும் கவலையுமாக, தாடியும் குடியுமாக…(சீ மோர்)..

நீ குண்டா இருக்கடா;உன்ன எனக்குப் பிடிக்கல எனக் காதலியால் நிராகரிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கண்ணீரும் கவலையுமாக, தாடியும் குடியுமாக…..ச்சே..ச்சே..அந்த சீன்லாம் இங்க இல்ல..

பிஜிஎம் போடு..பிஜிஎம் போடு..டன்.. டன். டன்..டன்..என்று சொல்லும் அளவிற்கு ஒரே வருடத்தில் கட்டுமஸ்தான மனிதனாக மாறி கெத்துக் காட்டி வருகிறார். இவரின் டிரான்ஸ்பர்மேசன் வீடியோ தற்பொழுது இணையத்தில் செம வைரல்.

சூப் பாய்
'ஓ அப்ப சாப்டியானு கேட்டா அது லவ் இல்லையா?' - வைரல் மீம்ஸ் கலெக்‌ஷன்

காதல் ஆசை யாரை விட்டதோ என முணு முணுத்துக் கொண்டு காதல் வலையில் கபக் என்று அகப்பட்டவர் தான் லண்டனைச் சேர்ந்த புவி..

“உன்கூட நூறு வருஷம் வாழனும்டா” எனக் காதலி கூறியதை நம்பி தொடர்ந்து காதல் மொழி பேசி வந்தார்.

காதல் தொடர்ந்து கொண்டிருக்க ஒரு நாள் காதலி, ட்ரெண்ட்டாக உருட்டாமல் நவுத்துப் போன பழைய உருட்டை தேடிப் பிடித்து உருட்டியுள்ளார்..,லண்டன் உனக்கு டன்.. டன்.. என மனதில் நினைத்துக் கொண்டு,நீ குண்டா இருக்க, உன்ன எனக்குப் பிடிக்கல என்று சொல்லிவிடுகிறார்.

இதனால் நொந்து போன புவி, “மேக்னாவ இழந்த வலியோட ஜிம்க்குள்ள நுழைஞ்சேன்” என வீர வசனம் பேசி ஜிம்க்குள் என்ட்ரி கொடுத்தார்..

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் எனக் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் ஒரே வருடத்தில் 144 கிலோவிலிருந்த உடல் எடையை 70 கிலோவாக மட மட வெனக் குறைத்து அசத்தி உள்ளார்.

சூப் பாய்
'ஒரு கோடிப்பே ரீல்ஸ் பண்ணி ஓஹோனு ஃபேமஸ் ஆனேன்' - 75 வயது வைரல் பாட்டியின் பேட்டி

இந்த உடல் இந்த தலையுடன் இணையப் போகிறது என எடிட்டிங் மூலம் வந்த உடம்பா..இல்லை இல்லை..ஹெவி வொர்க்கவுட் மூலம் வந்தது.

ஒரே வருடத்தில் ஆளே கமலுக்கும் விக்ரமுக்கும் சவால் விடும் அளவு உருமாறியிருக்கிறார்.. அண்ணே..! நீங்க வேற லெவல் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும்,சிலர் நமக்கும் இது போன்ற உடம்பு இல்லையே என்று பொறாமையும் கொள்கின்றனர்.

சூப் பாய்ஸ் எல்லாம் காதல் பட பரத் போல் ங்கீ.. ங்கீ என்று சுற்றாமல் புவி மாரி சூதானமா பொழச்சுக்கோங்கபா.

- ர.பிரேம் குமார்.

சூப் பாய்
'ரஜினியை கட்டிவெச்சு அடிச்சேன்' - மண்டபத்ரம் சக்திவேல் பேட்டி

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com