அரிசிக்கொம்பன் மனஉளைச்சலில் இருந்து மீள யாக பூஜை - சிரிப்பு காட்டும் சிவசேனா கட்சி !

ஏற்கெனவே இவர், 'டி.வி சீரியல் கண்பார்வை குறைபாடு கொண்ட கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு கண் ஆபரேஷன் செய்ய வேண்டும்' என வீடியோ வெளியிட்டு இணையவாசிகளுக்கு கிச்சு கிச்சு மூட்டினார்.
அரிசிக்கொம்பன்
அரிசிக்கொம்பன்டைம்பாஸ்
Published on

மூணாறு சின்னக்கானல் பகுதியில் கேரள வனத்துறையால் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து இடம்பெயர்ந்த அரிசிக்கொம்பன் மேகமலையில் தஞ்சமடைந்தது. மீண்டும் மேகமலையில் இருந்து தனது வாழ்விடமான மூணாறு நோக்கி புறப்பட்டது. இடையே குமுளியில் வழியாக லோயர்கேம்ப் விரட்டப்பட்ட அரிசிக்கொம்பன் திசை தெரியாமல் கம்பம் நகருக்குள் புகுந்தது.

கடந்த 7 நாள்களாக கம்பம் அருகே வனத்தை ஒட்டிய பகுதிகளில் உணவுக்காக சுற்றித்திரிந்த யானையை 3 கும்கிகளின் உதவியோடு பிடித்து களக்காடு முண்டந்துறை புலி காப்பக பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

அதேவேளையில், அரிசிக்கொம்பனை வனத்துறையினர் கம்பத்தில் இருந்து பிடித்து சென்றபோது மக்கள் கண்ணீர் விட்டு வழியனுப்பினர். திருநெல்வேலி களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் அரிசிக்கொம்பனை விட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மூணாறு பகுதி பழங்குடியினர் உள்ளிட்ட மக்கள் அரிசிக்கொம்பனை எங்கள் பகுதிக்கு திரும்ப கொண்டு வாருங்கள் என போராட தொடங்கியுள்ளனர்.

அரிசிக்கொம்பன்
கன்றுக்குட்டியின் மனு: 'என் அம்மாவ கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா' - விழுப்புரத்தில் வினோதம்

அரிசிக்கொம்பன் தொடர்பான வழக்குகள் கேரளாவில் நடந்து நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரிசிக்கொம்பன் இடமாற்றம் தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நடந்து வருகிறது.

இந்தப் பரபரப்புகளுக்கு இடையே சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐயப்பன் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட யானைக்காக யாக வேள்வி பூஜை நடத்தியாக மேலும் பரபரப்பு கிளப்பினார்.

அவரை நேரில் சென்று விசாரித்தபோது, "அரிசிக்கொம்பன் மிகவும் நல்ல யானை. அந்த யானை தனது பிறப்பிடம் திரும்ப வேண்டும். நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்க வேண்டும். அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள யானைக்கு நல்ல மனநிம்மதி கிடைக்க வேண்டும் என யாக வேள்வி பூஜை நடத்தினேன்" என்றார்.

அரிசிக்கொம்பன்
யானை மற்றும் புலிக்கு உதவி செய்த CSK சிங்கம் Dhoni! | IPL season-16

ஏற்கெனவே இவர், 'டி.வி சீரியல் கண்பார்வை குறைபாடு கொண்ட கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு கண் ஆபரேஷன் செய்ய வேண்டும். டி.வி சீரியல் பார்த்துக் கொண்டு பெண்கள் கணவர்களுக்கு சோறு கூட போடுவது இல்லை' என வீடியோ வெளியிட்டு இணையவாசிகளுக்கு கிச்சு கிச்சு மூட்டினார்.

'தற்போது யானை பாதுகாப்பான இடத்திற்கு போனபிறகு, தேனி வீரபாண்டி அருகே யாக வேள்வி பூஜை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக நினைத்து சிரிப்பு காட்டுகிறார்' என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

இதைவிட ஹைலைட்டா ஒரு மேட்டர், யானை கம்பம் நகருக்குள் வந்தபோது கெஞ்சியகுளம் அருகே 2 ஆம் நம்பர் ரேஷன் அருகே யானை வந்த போது இரண்டு, மூன்று இடங்களில் சாணி போட்டது. உயிர்பலி வாங்கிய யானை வருகையால் பீதியில் இருந்த மக்கள், ரோட்டில் போட்டிருந்த சாணியை அள்ளி செல்வதில் போட்டா போட்டி கொண்டு எடுத்துச் சென்றனர்.

என்னங்க, பலபேர பலிகொண்ட யானை வந்திருக்கு இப்படி அதோட சாணிக்கு சண்ட போடாத குறையா அலைபாயுறீங்க என அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "அதையேன் கேக்குறீங்க தம்பி, இந்த சாணியை பாதத்தில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் மிதித்தால், பூசி கொண்டால் பித்த வெடிப்பு சரியாகி விடுமாம். யானையின் சாணியை மாடியில் காய வைத்து அதை சாம்பிராணி போடும் போது சேர்த்து போட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் நொடிகள் ஏதுவும் வராது" என்றனர்.

"ஊருக்குள்ள யானை வந்ததும் வந்துச்சு எம்புட்டு அக்கப்போரு" என தேனி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

-மு.கார்த்திக்.

அரிசிக்கொம்பன்
'எங்களுக்கு வீடு வேணும்' - ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஆடுகள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com