Ind vs Aus : Border – Gavaskar Trophy வரலாறும் Updates -ஸும்!

மொத்தம் 15 பார்டர்-கவாஸ்கர் தொடர் நடந்துள்ளன. 15 தொடரில் 9 தொடர்களை இந்தியாவும், 5 தொடரை ஆஸ்திரேலியாவும் வெற்றுள்ளது.
Gavaskar
Gavaskar timepass
Published on

பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி (Border-Gavaskar Trophy) என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே விளையாடப்படும் டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும்.

இந்த தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சிறந்த டெஸ்ட் மேட்ச் வீரர்கள். மேலும், அந்தந்த அணிகளின் கேப்டனாக இருந்ததால் இருவரின் பெயரும் இந்த கோப்பைக்கு வைக்கப்பட்டது.

Gavaskar
90s Kids Cricket: ஃபேமஸான சர்ச்சைகள் ஒரு லிஸ்ட் | Epi 9

முதல் பார்டர்-கவாஸ்கர் ஃட்ராபி 1996-97யில் விளையாடப்பட்டது. இதுவரை மொத்தம் 15 பார்டர்-கவாஸ்கர் கோப்பைகளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி விளையாடியுள்ளன. 15 தொடரில் 9 தொடர்களை இந்தியாவும், 5 தொடரை ஆஸ்திரேலியாவும் வெற்றுள்ளது. ஒரு தொடர் டிராவிலும் முடிந்தது.

கடந்த மூன்று தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது. இதன் கடைசி தொடர் 2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது.

இந்த ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் ஃட்ராபி, 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் தொடரின் நான்கு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும்.

பார்டர்-கவாஸ்கர் டிராபி 2023க்கான அணிகள்: (முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு)

இந்தியா - ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ்.

ஆஸ்திரேலியா - பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.

Gavaskar
Thug Life Cricketers : கெத்து காட்டிய Virender Sehwag !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com