IPL : அந்த 9 ஓவர்கள்தான் தோல்விக்குக் காரணம் - CSK Dhoni சொன்ன விளக்கம் !

பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டில் எனக்கு மகிழ்ச்சியே. இந்தத் தோல்விக்கான பொறுப்பை பேட்டர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
CSK Dhoni
CSK Dhoni CSK Dhoni
Published on

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது. கடைசி ஓவரில் தோனி அடுத்தடுத்த சிக்ஸர்களைப் பறக்கவிட்ட போதும் சென்னை அணி கோட்டைவிட்டது.

இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, "பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டில் எனக்கு மகிழ்ச்சியே. இந்தத் தோல்விக்கான பொறுப்பை பேட்டர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், மிடில் ஓவர்களில் (9 ஓவர்கள்) பெரிதாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட்டே செய்யவில்லை. பிட்ச் ரொம்பவே மெதுவாக இருந்து பந்து காற்றில் நின்று வந்திருந்தால் கூட ஓகே. ஆனால், பிட்ச் அந்த அளவுக்கெல்லாம் மோசமாக இல்லை. ராஜஸ்தான் அணியில் அனுபவமிக்க ஸ்பின்னர்கள் இருந்தபோதும் ஸ்கோர் செய்யும் வாய்ப்புகளெல்லாம் இருந்தன. அதை பேட்டர்கள் தவறவிட்டுவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.

CSK Dhoni
IPL இல் புதிய சாதனை : Dhoniயை முந்திய Du Plessis, Maxwell ! - CSK vs RCB
Timepass Online
timepassonline.vikatan.com