IPL 2023 : CSK ரசிகர்களின் அன்பிற்காக நான் செய்ய வேண்டியது - ஓய்வு குறித்து Dhoni

என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால்,...
IPL 2023
IPL 2023IPL 2023
Published on

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில், குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.

இதனை தொடர்ந்து இந்த வெற்றி குறித்தும், தனது ஓய்வு குறித்தும் தோனியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "மிகவும் உணர்வுப்பூரப்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது" என்று கூறியுள்ளார்.

மேலும், "இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. அது என்னிடம் இருந்து கிடைக்கும் பரிசாக இருக்கும். அது என்னுடைய உடலுக்கு எளிதானதாக இருக்காது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய விதத்திற்காக, இது அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று." என்று தெரிவித்துள்ளார்.

IPL 2023
IPL சுவாரஸ்யங்கள் : Captain Cool Dhoni-யவே கோவப்பட வச்ச மேட்ச் நினைவிருக்கா? | IPL 2023 CSK

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com