IPL : Instagram ஐயும் கலக்கிய Rinku Singh - ஒரே நாளில் இத்தனை Followers ? | GT vs KKR

ஒரே ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மட்டுமல்ல இன்ஸ்டாகிராமிற்கும் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார், ரிங்கு சிங். அந்த அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில்..
Rinku Singh
Rinku SinghRinku Singh
Published on

நடப்பு ஐபிஎஸ் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், ரிங்கு சிங் தனது அதிரடியான ஆட்டத்தால், இந்த வெற்றியைப் பெற்று தந்தார். குஜராத் அணியின் பந்துவிச்சாளர் யாஷ் தயாளின் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டார். சமூக வலைதளங்களில் ரிங்கு சிங் கதாநாயகனாக ஜொலித்தார்.

ஒரே ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார், ரிங்கு சிங். அந்த அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.7 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். தற்போது வரை, இவரை 5.2 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Rinku Singh
IPL இல் புதிய சாதனை : Dhoniயை முந்திய Du Plessis, Maxwell ! - CSK vs RCB
Timepass Online
timepassonline.vikatan.com