IPL 2023 : Arshdeep Singh உடைத்த Stump இன் விலை - இணையத்தில் கிளம்பிய விவாதம் !

இந்த இரண்டு விக்கெட்டுகளும் சமூக வலைதளத்தில் வைரலானதோடு, அர்ஷ்தீப் சிங் உடைத்த ஸ்டெம்ப்பின் விலை என்ன என்பது குறித்த கேள்வியும் விவாதமாகியுள்ளது.
Arshdeep
Arshdeepடைம்பாஸ்
Published on

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில், பஞ்சாப் அணிக்கு வெற்றிப்பெற்றது. கடைசி ஓவரில் துல்லியமாக வீசிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங், திலக்வர்மா, வதேரா ஆகியோரை போல்ட் ஆக்கினார். இரண்டு விக்கெட்டிலும் நடு ஸ்டெம்ப் உடைந்தது.

இந்நிலையில், இந்த இரண்டு விக்கெட்டுகளும் சமூக வலைதளத்தில் வைரலானதோடு, அர்ஷ்தீப் சிங் உடைத்த ஸ்டெம்ப்பின் விலை என்ன என்பது குறித்த கேள்வியும் விவாதமாகியுள்ளது.

Arshdeep
IPL சுவாரஸ்யங்கள் : Virat Kohli ஏன் ஐபிஎல் இல் பௌலிங் போடுவதில்லை? - CSK vs RCB

கிரிக்கெட்டில் தற்போது நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஸ்டம்புகள் பயன்படுத்தப்படுகிறது. பெய்ல்சில் விளக்கும் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எல்.இ.டி. வகை ஸ்டம்பில், கேமரா, மைக்ரோ போன் போன்ற சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும்.

மூன்று ஸ்டெம்ப் குச்சிகள் அடங்கிய ஒரு செட் எல்.இ.டி. ஸ்டம்பு மற்றும் பெய்ல்சின் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவித்தன. அவ்வகையில் பார்த்தால், அர்ஷ்தீப் சிங் இரண்டு ஸ்டம்பை உடைத்த ஸ்டெம்ப்பால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பாகும்.

Arshdeep
IPL சுவாரஸ்யங்கள் : வாயில் ப்ளாஸ்த்ரி ஒட்டிய MI Pollard !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com