IPL : Delhi Capitals vs Gujarat Titans போட்டியை காண வந்த Rishabh Pant !

டெல்லி அணி விளையாடிய போட்டியைக் காண அவர் பார்வையாளராக மைதானத்திற்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
Rishabh Pant
Rishabh PantRishabh Pant
Published on

ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியை கான ரிஷப் பண்ட் மைதானத்திற்கு வருகைதந்தார்.

அண்மையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் இருந்தார். தற்போது உடல் நலம் தேறி ஓய்வில் உள்ளார். இதனால், இந்திய அணியில் இருந்தும் நடப்பாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில், டெல்லி அணி விளையாடிய போட்டியைக் காண அவர் பார்வையாளராக மைதானத்திற்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். முன்னதாக, அவர் ஐபிஎல்லில் டெல்லி அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

Rishabh Pant
IPL : CSK கூட விளையாடுறதும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு - Harbhajan Singh Tweet
Timepass Online
timepassonline.vikatan.com