Kerala
Kerala Kerala

Kerala : அரிக்கொம்பன் யானைக்காக போட்டியிட்ட வேட்பாளர் - வாங்கிய ஓட்டுகளால் அதிர்ச்சி !

"அரிக்கொம்பன் யானையைத் தமிழ்நாட்டிலிருந்து மீண்டும் இடுக்கி சின்னகனால் பகுதிக்கே கொண்டுவருவேன்" என்பதே இவரின் ஒரே வாக்குறுதி.

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து, புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜா.கா போன்ற பல்வேறு கட்சிகள் பல பிரச்சார உத்திகளைக் கையாண்டனர்.

தற்போதைய அரசின் ஆட்சி, புதுப்பள்ளியின் வளர்ச்சி, மறைந்த உம்மன் சாண்டியின் சாதனைகள் என பல்வேறு பிரச்சாரங்கள் பல கட்சிகளாலும் முன் வைக்கப்பட்டன .
சூடு பிடித்த இந்த தேர்தல் களத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட P K தேவதாஸ் என்பவரின் பிரச்சாரம் மட்டும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

"அரிக்கொம்பன் யானையைத் தமிழ்நாட்டிலிருந்து மீண்டும் இடுக்கி சின்னகனால் பகுதிக்கே கொண்டுவருவேன்" என்பதே இவரின் ஒரே வாக்குறுதி. அரிக்கொம்பன் யானையின் தீவிர ரசிகரான இவர் அரிக்கொம்பனுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், அரிகோம்பனை பற்றிய சரியான தகவல்கள் கூறப்படாமல் இருப்பது மர்மமாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார். 

அரிக்கொம்பனுக்கு நீதி கிடைக்க அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி  பிரச்சாரமும் நடத்தினார். அரிக்கொம்பனின் மற்றொரு தீவிர ரசிகையான அனிதா என்பவர் தான் இவரின் முதன்மை தேர்தல் முகவர். 'அரிக்கொம்பனை நினைக்கும்போதெல்லாம் எனக்கு அழாமல் இருக்கமுடியவில்லை" எனப் பிரச்சாரத்தில் அனிதா வேதனையுடம் கூறியிருந்தார்.

புதுப்பள்ளி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளரான மறைந்த உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் 80,144 வாக்குகள் பெற்று மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அரிக்கொம்பன் யானைக்காக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட P K தேவதாஸ் NOTAவுடனான கடுமையான போட்டியின் இறுதியில் 60 வாக்குகள் பெற்றுத் தேர்தலில் கடைசி இடத்தை பிடித்தார்.  புதுப்பள்ளி மக்கள் NOTAவிற்கு கூட 400 வாக்குகள் கொடுத்திருந்தனர். தேர்தலில் தோற்றாலும் அறிகொம்பனின் நீதிக்காக நான் போராடுவேன் என தேவதாஸ் கூறுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இடுக்கி சின்னகனால் பகுதியில் அரிக்கொம்பன் என்ற யானை விவசாய நிலங்களைச் சீரழித்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே கேரள வனத்துறையினரின் தீவிரமான பல முயற்சியின் முடிவில் இந்த அந்த யானையைப் பிடித்து தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதிக்கு மாற்றினர். இதன் பிறகு அங்கிருந்தும் வெளியேறிய அரிக்கொம்பான் தேக்கடி காடுகள் வழி தமிழ்நாடு கம்பம் நகருக்குள் புகுந்து வாகனங்களை உடைத்தது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு வனத்துறையினரின் கடுமையான பல முயற்ச்சியிகளின் முடிவில் அரிக்கொம்பனை திருநெல்வேலி களக்காடு முண்டன்துறை வனப்பகுதிக்கு மாற்றினர். இங்குதான் தற்போதுவரை அரிகொம்பன் யானை சுற்றித்திரிகிறது

அரிக்கொம்பன் யானையை சின்னகனாலிளிருந்து மாற்றியதற்குஇப்பொழுதும் கேரளாவில் சில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் அரிக்கொம்பனுக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டு அறிகொம்பனை திரும்பக் கொண்டு வர வேண்டும் எனப் பிரச்சாரமும் நடத்தி வருகின்றனர். இதற்காகப் பல வாட்ஸ்அப் குரூப்களும் இன்று செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே அரிகொம்பனை திரும்பக் கொண்டு வருவோம் எனக் கூறியும் அரிகொம்பனுக்கு அரிசி வாங்கி கொடுப்போம் என்று கூறியும் பலர் பண மோசடி செய்ததாகவும் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. 

அரிக்கொம்பன் ரசிகர்கள் நாளுக்கு நாள் இப்படிப் பல செய்திகளைக் கிளப்பினாளும் அரிக்கொம்பனுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. எது எப்படியோ அரிக்கொம்பன் புதிய யானைக் கூட்டத்துடன் திருநெல்வேலி வனப்பகுதியில் ஜாலியாக சுற்றித் திரிவதாகத் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

- அலன் சி மெயின்சன்.

Kerala
Jackie Chan : ஜாக்கி சான் எனும் சூப்பர் ஸ்டார் உருவான கதை!

Related Stories

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com