நம் மூளைக்கு எட்டாத பெயர்கள்தான் இவை. டங்க் டிவிஸ்டர்களுக்கு இணையாக வார்த்தைகளைக் கொண்டு இருக்கின்றன. இந்த எழுத்துக்களை உச்சரிப்பது என்பது சற்று சிரமம்தான். உலகில் மிகப்பெரிய இடப்பெயர்கள் இதோ..
1.TAUMATAWHAKATANGIHANGAKOAUAUOTAMATEAPOKAIWHENUAKITANATAHU - நியூசிலாந்து
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள மலை தான் உலகின் மிக நீளமான இடப் பெயரைக் கொண்டுள்ளது. இதன் பெயரில் 85 எழுத்துக்கள் உள்ளன. புரியும் படியாகச் சொல்லப்போனால் ஒரு வார்த்தையில் 85 எழுத்துக்கள். மக்களின் பயன்பாட்டிற்காக மலை பெரும்பாலும் Taumata என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தின் பெயர் கின்னஸ் உலக சாதனைகளில் மிக நீளமான இடப் பெயராகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
2.LLANFAIRPWLLGWYNGYLLGOGERYCHWYRNDROBWLLLLANTYSILIOGOGOGOCH - வேல்ஸ்
வேல்ஸின் வடமேற்கு கடற்கரையின் Ynys Môn தீவில் உள்ள கிராமத்தின் பெயர் தான் உலகின் இரண்டாவது மிகப்பெரிய இடப்பெயரைக் கொண்டுள்ளது. இதன் பெயரில் 58 எழுத்துக்கள் உள்ளன. Llanfair Pwllgwyngyll என்பதுதான் இதன் பயன்பாட்டுப் பெயர்.
3. CHARGOGGAGOGGMANCHAUGGAGOGGCHAUBUNAGUNGAMAUGG - அமெரிக்கா
இது அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள ஒரு ஏரியின் பெயர். இது அமெரிக்காவின் மிக நீளமான இடப் பெயராகும். இந்த பெயரில் 45 எழுத்துக்கள் உள்ளன. இந்த ஏரி சௌபுனகுங்காமௌக் என்ற பெயரில் சுருக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி வெப்ஸ்டர் ஏரி என்றும் அழைக்கப்படுகிறது.
4. TWEEBUFFELSMETEENSKOOTMORSDOODGESKIETFONTEIN - தென்னாப்பிரிக்கா
இது தென்னாப்பிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பண்ணை. இந்த பெயர் 44 எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இது தென்னாப்பிரிக்காவின் மிக நீளமான இடப் பெயராகும். தென்னாப்பிரிக்கக் கலைஞர்களான அன்டன் கூசன் மற்றும் ஃபனஸ் ரவுடன்பாக் ஆகியோர் இணைந்து எழுதிய பாடலும் இந்த இடத்தின் பெயருடன் உள்ளது.
5. AZPILICUETAGARAYCOSAROYARENBERECOLARREA - ஸ்பெயின்
நவர்ராவில் உள்ள அஸ்பில்குடாவில் உள்ள ஒரு ஸ்பானிஷ் கிராமத்தின் பெயர் தான் உலகில் ஐந்தாவது பெரிய இடப்பெயர். இதில் 39 எழுத்துக்கள் உள்ளன. இது ஸ்பெயினில் மிக நீளமான இடப்பெயர், ஐரோப்பாவில் இரண்டாவது நீளம் மற்றும் உலகின் ஐந்தாவது நீளமான பெயர்.
- சி.ஹரிஹரன்.