Lovers Day
Lovers Daytimepass

Lovers Day : உலக ஃபேமஸ் காதல் ஜோடிகள் !

பல வருட சர்ச்சைகளுக்குப் பிறகு, ஜப்பானின் இளவரசி மாகோ தனது முன்னாள் வகுப்புத் தோழரான கொமுரோ என்ற சாமானியரை அரச அந்தஸ்தை விட்டுக்கொடுத்து 26 அக்டோபர் 2021 ஆம் தேதி மணந்தார்.
Published on

உலகளவில் காதலில் சிறந்தவர்கள் என்று ஆதாம் ஏவலில் தொடங்கி ரோமியோ ஜூலியட், கிளியோபட்ரா மார்க் ஆண்டனி,  சாஜஹான் மும் தாஜ் என வரலாற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். வரலாற்று காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது போல வரலாற்றில் இடம் பிடித்த இன்றைய காதல் ஜோடிகளைத் எத்தனைப் பேருக்கு தெரியும்.

1. ஜப்பான் இளவரசி மாகோ - கொமுரோ.

பல வருட சர்ச்சைகளுக்குப் பிறகு, ஜப்பானின் இளவரசி மாகோ தனது முன்னாள் வகுப்புத் தோழரான கொமுரோ என்ற சாமானியரை அரச அந்தஸ்தை விட்டுக்கொடுத்து 26 அக்டோபர் 2021 ஆம் தேதி மணந்தார்.

POOL

2. ஆஷ்லே ஓல்சன் மற்றும் லூயிஸ் ஐஸ்னர்.

டி.வி. நட்சத்திரம் ஆஷ்லே ஓல்சென் அழகு கலைஞரான லூயிஸ் ஐஸ்னரை  கலிஃபோர்னியா பெல்-ஏர்ரில்  டிசம்பர் 28 மணந்தார். இவர்கள் இருவரும் 2017இல் லிருந்து  காதலித்து வந்தனர்.

3. கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம்

மிடில்டனும் இளவரசர் வில்லியமும் 2010 இல் காதலிக்க தொடங்கி  2011 இல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் திருமணம் செய்து கொண்டனர்.

4. ஜப்பான் இளவரசி சயாகோ

இளவரசி மாகோவுக்கு முன்னோடியாக இருந்தது அவரது அத்தை சயாகோ, இவர் மன்னர் அகிஹிட்டோவின் ஒரே மகள். எனினும் யோஷிகி குரோடா என்ற சாதாரண மனிதரைக் காதலித்து அவருக்காக அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார்.

இவர்களது திருமணம் கடந்த 2005ம் ஆண்டு நடந்தது.

Lovers Day
Lovers Day : காதலிக்கு பரிசு வாங்க ஆடு திருட்டில் இறங்கிய காதலன்கள் !
Timepass Online
timepassonline.vikatan.com