Lovers Day : காதலிக்கு பரிசு வாங்க ஆடு திருட்டில் இறங்கிய காதலன்கள் !

தனது காதலிக்கு காதலர் தினத்தன்று பரிசு வாங்கிக் கொடுக்க காசு இல்லாததால், தனது நண்பருடன் இணைந்து ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
Lovers Day
Lovers Dayடைம்பாஸ்
Published on

தான் நடித்த திரைப்படம் ஒன்றில், காதலியுடன் பார்ட்டிக்கு செல்ல காசு இல்லாமல் நகை திருட்டில் நடிகர் சிம்பு ஈடுபடுவதை போல, காதலர் தினத்தன்று காதலிக்கு பரிசு வாங்கி கொடுக்க காசு இல்லாததால், இளைஞர்கள் ஆடு திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலையரசன்குப்பம் பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதே பகுதியில் ரேணுகா என்பவரது ஆட்டுப்பட்டியில் இருந்து ஆட்டினை திருடிய கல்லூரி மாணவர் அரவிந்த்குமார்(20) மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டதில்... அரவிந்த் குமார், தனது காதலிக்கு காதலர் தினத்தன்று பரிசு வாங்கிக் கொடுக்க காசு இல்லாததால், தனது நண்பருடன் இணைந்து ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. எனவே, இருவர் மீதும் 379-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளது போலீஸ்.

Lovers Day
Happy Teddy Day 2023 : இந்த கரடி பொம்மைக்கு பின்னாடி ஒரு வரலாறா? | Valentine's Week
Timepass Online
timepassonline.vikatan.com