Madurai : சாலையில் ஜாலியாக படுத்து போலீசுக்கு அதிர்ச்சி கொடுத்த மதுப்பிரியர் !

போலீஸாரிடம், "லைசென்ஸ் உங்க கிட்டேதான் இருக்கு" என்று திரும்ப திரும்ப கூறியுள்ளார். ஆரம்பத்தில் புரியாமல் குழம்பிய போலீஸார் பின்னர் முழுமையாக விசாரித்தனர்.
Madurai
MaduraiMadurai
Published on

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டியவரை போலீஸார் பிடித்து லைசென்ஸ் கேட்டுள்ளார்கள். அதற்கு கோபமான அந்த நபர் சாலையில் படுத்து போராட்டம் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி ஆகியுள்ளனர். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸ் பெரும்பாடுபட்டுள்ளார்கள்.

அவர் போலீஸாரிடம், "லைசென்ஸ் உங்க கிட்டேதான் இருக்கு" என்று திரும்ப திரும்ப கூறியுள்ளார். ஆரம்பத்தில் புரியாமல் குழம்பிய போலீஸார் பின்னர் முழுமையாக விசாரித்தபோது, கடந்த வாரம் இவர்மீது டிரங்கன் டிரைவ் வழக்கு போட்டு லைசென்ஸை போலீஸ் வாங்கி வைத்ததுக்கொண்டது தெரிய வந்தது.

மது போதையில் அட்டகாசம் செய்த இவர் காப்பீட்டு நிறுவன ஊழியர் ஆவார்.

Madurai
Police Story : கோவில் கலசத்தை திருட போட்ட திட்டம் - சிக்கிய சிரிப்பு திருடர்கள் !
Timepass Online
timepassonline.vikatan.com