Railway : Train இன்ஜின் டிரைவருக்கு Smart Watch தடை !

மதுரைல இன்ஜின்ன 110km-ல இயக்கிட்டு இருக்கும்போது இன்ஜின் ட்ரைவர் தன்னோடு ஸ்மார்ட் வாட்ச்ச பயன்படுத்திட்டு இருந்தாரு‌.
Smart Watch
Smart Watchtimepass

Dutyல இருக்கும்போது ரயில் இன்ஜின் டிரைவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துறதுக்கு தடை விதிச்சிருக்காங்க‌. மதுரையில ஒரு இன்ஜின் டிரைவர் ட்ரெயின் இன்ஜின்ன இயக்கிட்டு இருக்கும் பொழுது ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துறத பார்த்துதான் இந்த தடைய போட்டு இருக்காங்க.

இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் கட்டாயம்.. நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பொழுது சீட் பெல்ட் கட்டாயம்‌.. அந்த மாதிரி ட்ரெயின் இயக்கும்போது இன்ஜின் டிரைவருக்கு பல விதிமுறைகள் இருக்கு.. அதுல மொபைல்போன் பயன்படுத்தக் கூடாதுன்றது ஏற்கனவே இருந்துட்டு இருக்க ஒரு ரூல்‌. இப்போ இன்ஜின் டிரைவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தக் கூடாதுன்ற உத்தரவ மதுரை டிவிஷன் ரயில்வே தெரிவிச்சிருக்கு.

மதுரைல இன்ஜின்ன 110km-ல இயக்கிட்டு இருக்கும்போது இன்ஜின் ட்ரைவர் தன்னோடு ஸ்மார்ட் வாட்ச்ச பயன்படுத்திட்டு இருந்தாரு‌. ட்ரெயின் இயக்கிட்டு இருக்கும்போது போன் பயன்படுத்துறதுக்கு அனுமதி கிடையாது. ஸ்மார்ட் வாட்ச்ச போனாவும் பயன்படுத்த முடியும் கூடவே கவனச்சிதறல் ஏற்பட்றதுக்கான வாய்ப்பும் இருக்குன்றதால ட்ரெயின் இயக்கிட்டு இருக்கும்பொழுது இன்ஜின் டிரைவர் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தக் கூடாதுன்ற தடை விதிச்சிருக்காங்க.

சமீபத்துல தான் ஒடிசால ஒரு கொடூரமான டிரெயின் விபத்து ஏற்பட்டுச்சு. இதுல 280க்கும் மேற்பட்டவங்க இறந்து போயிருக்காங்க. இப்படி ட்ரெயின் விபத்துக்கள் அதிகமாகி அதனால் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகமா இருக்குறதுனால இன்ஜின் டிரைவருடைய கவனச்சிதறல் ட்ரெயின் விபத்துக்கு காரணமா இருந்திடக்கூடாது அப்படிங்கிறதுக்காக தான் இந்த தடைய விதிச்சி இருக்காங்க.

Smart Watch
Odisha Train Accident : AI தொழில்நுட்பம் மூலமாக பலியானவர்களை அடையாளம் கண்ட ரயில்வே !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com