Maharashtra : குடை பிடித்தபடி பேருந்தை இயக்கி பேருந்து ஓட்டுநர் - வைரல் ஆகும் வீடியோ!

கட்சிரோலியில் உள்ள அஹேரி டிப்போவைச் சேர்ந்த பேருந்துகளில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதும், அது சமூக வலைதளங்களில் வாடிக்கையாவதும் தொடர்கதையாகியுள்ளது.
Maharashtra
Maharashtra Maharashtra

மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்துக் கழக (MSRTC) பேருந்தின் ஓட்டுநர் குடை பிடித்த படி வாகனத்தை ஓட்டியதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வாகனத்தின் மேற்கூரையில் மழைநீர் கசிவதனால் ஒரு கையில் குடையையும், மறுக்கையில் பேருந்தையும் ஓட்டுநர் ஓட்டி செல்கிறார். இந்தப் பேருந்து அஹெரி டிப்போக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அம்மாநில காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (MSRTC) எதிரான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அஹேரியில் இருந்து தொடர்ந்து வெளிவரும் வீடியோக்கள் :

கட்சிரோலியில் உள்ள அஹேரி டிப்போவைச் சேர்ந்த பேருந்துகளில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதும், அது சமூக வலைதளங்களில் வாடிக்கையாவதும் தொடர்கதையாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பல மாவட்டங்கள் பழுதடைந்த பேருந்துகள் தொடர்பாக நிறைய புகார்கள் அதிகரித்துள்ளன.

- அ. சரண்.

Maharashtra
Vijay : Jason Sanjay அணிந்திருக்கும் Hugo Boss Shirt - இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய தகவல்கள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com