'சரக்கு சாப்பிடணும் போல இருந்தனால, ATM-அ உடைச்சேன்' - கதறி அழுத திருடன் !

"வேலை இல்லாமல் சுற்றித் திரிந்தேன். சரக்கு சாப்பிடணும் போல இருந்தது. 24 மணி நேரம் பணம் கொடுக்கும் மிஷின்தான் இருக்கேன்னு, ஏடிஎம்-ஐ கடப்பாறையால உடைச்சேன்"
ATM
ATMATM
Published on

நாகப்பட்டினம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ஏடிஎம் மையம் திறந்து கிடப்பதையும், உள்ளே இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதன் பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. ஏ.டி.எம். மையத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரை வைத்து உடைத்தும், பின்னர் பணம் எடுக்க முடியாமல் கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

பப்ளிக் ஆபீஸ் சாலை முதல் பெருமாள் கோவில் வரை உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நாகை பெருமாள் வடக்கு வீதியை சேர்ந்த 25 வயதான விஸ்வநாதன் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, நாகை பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த விஸ்வநாதனை, தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

"வேலை இல்லாமல் சுற்றித் திரிந்தேன். சரக்கு சாப்பிடணும் போல இருந்தது. பணத்திற்கு என்ன செய்றதுனு யோசிச்சப்போ, 24 மணி நேரம் பணம் கொடுக்கும் மிஷின்தான் இருக்கேன்னு, ஏடிஎம்-ஐ கடப்பாறையால உடைச்சேன்... ஆனா, அது சொதப்பிருச்சு... ஏடிஎம் மிஷின உடைக்கவே முடில... பர்ஸ் டைம் திருட்டுல இறங்கினதுனால என்னவோ, முதல் திருட்டு முற்றிலும் கோணலாயிடுச்சு" என்று விஸ்வநாதன் கூறியுள்ளார்.

திருட முடியாததை நினைச்சு, ஒரு மணிநேரம் ஏடிஎம் அறையிலேயே அழுதுக்கொண்டு இருந்ததாக போலீசாரிடம் திருடன் தெரிவித்தான். கொள்ளையன் விஸ்வநாதன் சொன்னது, ஒரு பக்கம் கதைய கேட்ட போலீசாருக்கு சிரிப்பு வந்தாலும், மறுபக்கம் கடமையில் உறுதியாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து, விஸ்வநாதனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொகுசு வாழ்க்கைக்கும், மதுபோதைக்கும் ஆசைப்பட்டு, கன்னி திருடர்களாக மாறும் நபர்களால், பொதுமக்களுக்கு மட்டுமல்ல, போலீஸ்காரர்களுக்கும் இம்சையாகத்தான் உள்ளது.

ATM
German : வதந்தி பட பாணியில் ஒரு கொலை வழக்கு !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com