Miss India 2023 பட்டத்தை வென்ற 19 வயது Nandini Gupta !

டெல்லியைச் சேர்ந்த ஷ்ரேயா பூஞ்சாவுக்கு இரண்டாம் இடமும், மணிப்பூரைச் சேர்ந்த தவுநாவ்ஜாம் ஸ்டிரெலா லுவாங்குக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.
Nandini Gupta
Nandini GuptaNandini Gupta

2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகி போட்டி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்றது. இந்த போட்டியில், ராஜஸ்தானின் கோடா நகரைச் சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தா முதல் இடம் பிடித்து வெற்றிப்பெற்றார். டெல்லியைச் சேர்ந்த ஷ்ரேயா பூஞ்சாவுக்கு இரண்டாம் இடமும், மணிப்பூரைச் சேர்ந்த தவுநாவ்ஜாம் ஸ்டிரெலா லுவாங்குக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.

வெற்றிப்பெற்றவர்களுக்கு போட்டியை நடத்திய பெமினா மிஸ் இந்தியா அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டது. இந்த போட்டியில் பார்வையாளர்களை மகிழ்விக்க, பாலிவுட் நடிகர், நடிகையரான கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டேவின் நடன நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், மணீஷ் பால் மற்றும் நடிகை பூமி பட்னாகர் நடத்திய நிகழ்ச்சியும் ரசிகர்களை பரவலாக கவர்ந்தது.

Nandini Gupta
Rudhran : பால்குடம், பாலபிஷேகம், பறவை காவடி - செஞ்சியைக் கலக்கிய Raghava Lawrence ரசிகர்கள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com